ராட்சத பலூன்களை மீண்டும் அனுப்புவதாக வடகொரியா எச்சரிக்கை – எல்லையில் தென்கொரியா தீவிர கண்காணிப்பு

சியோல், கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனை சமாளிக்க தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக தென்கொரியாவுக்குள் நூற்றுக்கணக்கான ராட்சத பலூன்களை வடகொரியா பறக்க விட்டது. அந்த பலூன்களில் சிகரெட் துண்டுகள், பேட்டரி துண்டுகள் போன்ற குப்பைகள் இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த தென்கொரியா 2018-ல் மேற்கொண்ட வடகொரியா உடனான … Read more

புறப்பட்ட சில நிமிடங்களில் தீ பிடித்து எரிந்த விமானம்: பதறிய பயணிகள்

கனடாவின் டொரண்டாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்க்கு 389 பயணிகள், 113 சிப்பந்திகளுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது. டொரோண்டா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே தரையிறக்குமாறு அறிவுறுத்தினர். சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பினர். இதனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். முன்னதாக, விமானத்தில் தீ … Read more

விண்வெளிக்கு சூடான மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன், அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் தற்போது 3-வது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளார். 3-வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள சுனிதா, தன்னுடன் விநாயகர் சிலை மற்றும் சூடான மீன் குழம்பை தன்னுடன் கொண்டு சென்றுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தனது வீட்டில் இருப்பதுபோன்ற … Read more

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 4 பிணைக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்

ஜெருசலேம், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் எனக் கூறி காசா மீது இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்தது. பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பிணைக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பிணைக் கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இன்னமும் 130 பிணைக் கைதிகள் மீட்கப்பட வேண்டும் என்றும், … Read more

முன்னாள் விண்வெளி வீரர் விமான விபத்தில் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் (வயது 90). இவர் அப்பல்லோ-8 விண்கலத்தில் சென்று நிலவை சுற்றி வந்த மூன்று நபர்களில் ஒருவராவார். அப்பல்லோ-8 விண்கல பயணத்தின் போது ‘எர்த்ரைஸ்’ புகைப்படத்தை எடுத்தவர். விண்வெளியில் இருந்து பூமியின் முதல் வண்ணப் புகைப்படம் இதுவாகும். மனிதர்கள் கிரகத்தை எப்படிப் பார்த்தார்கள் என்பதை மாற்றியமைக்கும் நவீன வரலாற்றில் மிக முக்கியமான புகைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் விண்வெளியில் இருந்து பூமி எவ்வளவு மென்மையானது மற்றும் தனிமைப்படுத்தப்பட்டது … Read more

மோடிக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாகிஸ்தான் புது விளக்கம்

இஸ்லாமாபாத், நாடாளுமன்றதேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.கடந்த 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில், பா.ஜனதா உள்பட எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் வெற்றிபெறவில்லை. இருப்பினும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜனதா முடிவு செய்தது.மறுநாள் (5-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. அதில், … Read more

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

பனாமா சிட்டி, மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பனாமா. இந்நாட்டின் தலைநகரில் பனாமா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வேளாண்துறை மாணவ, மாணவிகள் நேற்று களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணவ, மாணவிகள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். தினத்தந்தி

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 7 பேர் பலி

டார்குஷ் , சிரியாவின் வடமேற்கு பகுதியில் டார்குஷ் நகரின் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது . ஆதரவற்றோருக்கான பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்து, நேற்று ஓரண்டஸ் ஆற்றை ஒட்டியுள்ள மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு இறங்கி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுக்குள் விழுந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் … Read more

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கை உதாரணம் காட்டிய இம்ரான் கான்

இஸ்லமபாத், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் குதித்தவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கடந்த 2021 ஆம் ஆண்டு இம்ரான் கான் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததை அடுத்து தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன்பிறகு இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே, வழக்கு ஒன்று தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இம்ரான் … Read more

ஐ.நா. மனித உரிமை அமைப்பு ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

சனா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் வருவாய் ஆதாரங்களை … Read more