இனி 'பவர் ஸ்டார்' வேண்டாம் : பவன் கல்யாண் திடீர் முடிவு

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களை பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு ஹீரோ அறிமுகமாகி சில பல ஹிட்டுகளைக் கொடுத்ததும் அவர்களைக் குளிர்விக்க சிலரால் சூட்டப்படும் பெயர்கள்தான் அவை. தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் இந்த பட்டப் பெயர்களால் ஹீரோக்களை குறிப்பிடுவது இருந்து வருகிறது. 'பவர் ஸ்டார்' என கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு தெலுங்கு பேசும் … Read more இனி 'பவர் ஸ்டார்' வேண்டாம் : பவன் கல்யாண் திடீர் முடிவு

நதியை மீட்ட வேலூர், திருவண்ணாமலை மக்கள்: பிரதமர் மோடி பாராட்டு| Dinamalar

புதுடில்லி: திருவண்ணாமலையில் ஓடும் நாகநதி வறண்டு போனதால், வேலூர், திருவண்ணாமலை மக்கள் ஒன்று சேர்ந்து மீட்டெடுத்தமைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இன்றைய ‛மன் கி பாத்’ ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும், நாம் மிகவும் கொண்டாட வேண்டிய தினம் உலக நதி தினம். உலக நதிகள் தினத்தை கொண்டாடுவதால், செப்., மாதம் முக்கியமான மாதமாக உள்ளது. நமக்கு தண்ணீர் வழங்கும் நதிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய பங்களிப்பு குறித்து நினைவு … Read more நதியை மீட்ட வேலூர், திருவண்ணாமலை மக்கள்: பிரதமர் மோடி பாராட்டு| Dinamalar

பாலுவுக்கும், எனக்குமான நட்பு… – நெகிழ்ந்த இளையராஜா

மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியமின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று(செப்., 25) நடந்தது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இளையராஜா பேசும்போது, ‛‛எனக்கும், பாலுவுக்கும் இடையேயான நட்பு பற்றி அனைவரும் அறிவர். சர்வசாதரணமாக பழக்கூடிய உண்ணதமான மனிதர். எங்கள் நட்பில் எந்த விரிசலும் இல்லை. தொழில் விஷயத்தில் என்ன இப்படி பாடுற என நான் பேசி இருக்கிறேன், அவரும் சரியாக வரவில்லை என்று பேசியிருப்பார். … Read more பாலுவுக்கும், எனக்குமான நட்பு… – நெகிழ்ந்த இளையராஜா

இந்தியாவில் தொடர்ந்து குறைகிறது தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 28,326 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது, 26 ஆயிரம் பேர் நலமடைந்தனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 28,326 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,52,745 ஆனது. தற்போது 3,03,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 26,032 பேர் குணமடைந்தனர். இதன் மூலம், கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,29,02,351 ஆக அதிகரித்தது. மேலும் 260 பேர் உயிரிழந்ததால், … Read more இந்தியாவில் தொடர்ந்து குறைகிறது தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

மகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமாக தியேட்டர்களைத் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கின. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தார்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்களைத் திறப்பதை காலம் தாழ்த்தியே வந்தார்கள். இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதி முதல் அங்கு தியேட்டர்கள் திறக்கப்படும் என மாநில அரசு சற்று முன் அறிவித்துள்ளது. … Read more மகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி

அக்டோபர் ஹிந்து பாரம்பரிய மாதம்: அமெரிக்க மாகாணங்கள் அறிவிப்பு| Dinamalar

வாஷிங்டன்;அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ், ஓஹியோ உள்ளிட்ட பல மாகாணங்கள் அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளன.அக்டோபரில் நவராத்திரி, தசரா உட்பட பல பண்டிகைகளை ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர்.மகாளய அமாவாசையும், சில சமயம் தீபாவளி பண்டிகையும் அக்.,ல் வருவது உண்டு.இத்தகைய சிறப்பு வாய்ந்த அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி அமெரிக்காவைச் சேர்ந்த பல ஹிந்து அமைப்புகள், மாகாண அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.இதை ஏற்று டெக்சாஸ், புளோரிடா, நியூ ஜெர்சி, ஓஹியோ, மாசாசூசெட்ஸ் மாகாண அரசுகள், அக்டோபரை ஹிந்துக்களின் … Read more அக்டோபர் ஹிந்து பாரம்பரிய மாதம்: அமெரிக்க மாகாணங்கள் அறிவிப்பு| Dinamalar