தேசிய கிக் பாக்சிங்

சென்னை : தேசிய கிக் பாக்சிங் அணிக்கான வீரர் தேர்வு, சென்னையில் நடந்தது.தேசிய கிக் பாக்சிங் விளையாட்டுக்கான வீரர் தேர்வு, சென்னை, வேப்பேரி, செங்கல்வராயன் பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்தது. அதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக பள்ளி விளையாட்டு கல்வி குழுமத்தின் சார்பில் நடந்த இத்தேர்வில், 14, 17, 19, ஆகிய வயதுக்கான பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற வீரர்கள், தேசிய கிக் பாக்சிங் அணிக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

'பிக்பாஸ் சீசன் 3' தெலுங்கு வின்னர் ராகுல் சிப்லிகுன்ச்

‘பிக்பாஸ் சீசன் 3’ தெலுங்கு வின்னர் ராகுல் சிப்லிகுன்ச் ‘பிக்பாஸ் சீசன் 3’ தெலுங்கு நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், நாட்டுப் புறப் பாடகர் ஆன ராகுல் சிப்லிகுன்ச் வெற்றி பெற்று 50 லட்ச ரூபாயைப் பரிசாகப் பெற்றுள்ளார். அவருக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி பரிசு வழங்கினார்.ஜுலை 21ம் தேதி ஆரம்பமாகி நேற்றுடன் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். தமிழைப் போலவே … Read more'பிக்பாஸ் சீசன் 3' தெலுங்கு வின்னர் ராகுல் சிப்லிகுன்ச்

தலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை!

தலைசுற்றல் ஏன் வருகிறது?தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம். இதில், 1 சதவீதம் பேருக்கு, மூளையில் கட்டி உருவாவதால், தலைசுற்றல் வரலாம். இதுதவிர, உள் காதில் உள்ள திரவத்தின் சமநிலை பாதிக்கப்படுவதால், ‘வெர்டிகோ’ எனப்படும் தலைசுற்றல் பிரச்னை ஏற்படலாம். காதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?உள் காது, நடு … Read moreதலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை!

கோயில்களில் அன்னதானம்

கம்பம், :கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் முருகன்,வள்ளி – தெய்வானை திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்தது.அதனைத்தொடர்ந்து கோயிலின் முருக பக்தர்கள் பேரவை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான என்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கம்பம், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சர்வஅலங்காரத்தில் வீதி உலா வந்தார்.*கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், ஆதிசக்தி விநாயகர் கோயில், கவுமாரியம்மன் கோயில்களிலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.

20 கோடி பார்வைகளைத் தொட்ட 'ஒய் திஸ் கொலவெறி'.

20 கோடி பார்வைகளைத் தொட்ட ‘ஒய் திஸ் கொலவெறி’. இன்றைய இந்திய சினிமாவின் யு டியுப் சாதனைகளுக்கெல்லாம் முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டது ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் தான். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.படத்தின் அனைத்து பாடல்களை வெளியிடுவதற்கு முன்பாக, அப்படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை யு டியுபில் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் … Read more20 கோடி பார்வைகளைத் தொட்ட 'ஒய் திஸ் கொலவெறி'.