‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி – குடும்பத்தின் குற்றச்சாட்டும், விசாரணையும்!

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் ‘உணவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்’ என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் முக்தார் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் … Read more

ஓசூர் அருகே தேர்தலில் ‘ஜனநாயக கடமையாற்ற’ 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் கிராம மக்கள்

ஓசூர்: ஓசூர் பாகலூர் அருகே கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலையுள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வாகன வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பிஎஸ் திம்ம சந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பி.தட்டனபள்ளி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமம் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. மேலும், இக்கிராமத்தில் … Read more

ஜம்மு – காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டாக்ஸி – 10 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் டாக்ஸி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீரின் ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே பேட்டரி சாஸ்மா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு டாக்ஸி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டாக்ஸியில் பயணம் செய்த 10 … Read more

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் பெயரில் 5 சுயேச்சைகள் போட்டி

கோவை: கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் உட்பட 59 மனுக்கள் ஏற்கப்பட்டன. கோவை தொகுதியில் ராஜ்குமார் என்ற பெயரில் 6 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் … Read more

மற்றவர்களை மிரட்டுவது காங்கிரஸின் கலாச்சாரம்: பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: ‘‘மற்றவர்களை மிரட்டுவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் காங்கிரஸ் கட்சியை நிராகரிப்பதில் ஆச்சர்யம் இல்லை’’ என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்‘‘மற்றவர்களை அச்சுறுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். உறுதிப்பாட்டுடன் கூடியநீதித்துறை தேவை என, காங்கிரஸ் கட்சியினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு … Read more

சென்னை ஆழ்வார்பேட்டையில் பரிதாபம்: கேளிக்கை விடுதி கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் மதுபான கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. நேற்று இரவு இந்த விடுதியில் ஏராளமானோர் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் … Read more

அமலாக்க துறை சம்மனை புறக்கணித்த மஹுவா மொய்த்ரா

கொல்கத்தா: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா நேற்று புறக்கணித்தார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மக்களவை நெறிமுறை குழுவின் விசாரணைக்கு பிறகு அவர்எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில் அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல் தொடர்பாக மார்ச் 28-ம் தேதிவிசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மற்றும் மஹுவாவுக்கு அமலாக்கத் துறை … Read more

39 தொகுதிகளிலும் மனுக்கள் பரிசீலனை முடிந்தது: தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்பரிசீலிக்கப்பட்டதில், 1,085 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிமாலை 3 மணியுடன் முடிந்தது. 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக, கரூரில் 73,வடசென்னையில் 67, தென்சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று காலை 11 மணி முதல் அந்தந்த தொகுதி பொது … Read more

அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையை காக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடந்த 26-ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் நீதித் துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த காலம் நீதித் துறையின் பொற்காலம். இப்போதைய நீதிமன்றங்களின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது … Read more

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பரிதாப உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்; வைகோ அஞ்சலி

ஈரோடு/ சென்னை: விஷ மாத்திரை கரைசலை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 77. ஈரோடு எம்.பி.யான அ.கணேசமூர்த்தி, ஈரோடு பெரியார் நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி பாலாமணி காலமாகிவிட்டார். இவருக்கு கபிலன் என்ற மகன், தமிழ்பிரியா என்ற மகள் உள்ளனர். கடந்த 24-ம் தேதி விஷ மாத்திரை கரைசலை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை … Read more