அதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் என கூறப்படுகிறது. 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் … Read moreஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநில தேர்தல் முடிவை சொல்லி அடித்த நியூஸ்டிஎம்!

இணைய செய்தி நிறுவனங்களில் புதிய முயற்சியாக, தேர்தலுக்கு பிந்தைய பிரத்யேக கருத்துக்கணிப்பை newstm தமது வாசகர்களுக்கு அளித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள், நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன. இத்தேர்தல் முடிவுகளை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுடன் ஒப்பிட்டு மாநிலவாரியாக வாசகர்களுக்கு இங்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம். ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுகு தேசம் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது. தற்போதைய தேர்தல் … Read moreஆந்திர மாநில தேர்தல் முடிவை சொல்லி அடித்த நியூஸ்டிஎம்!

மக்கள் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – ஓபிஎஸ்

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.  இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதப் பிரதமர் மோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு … Read moreமக்கள் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – ஓபிஎஸ்

17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்!

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மக்களவையில் மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் இடம்பெறுகின்றனர்.  17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.  இதையடுத்து, 17வது மக்களவைக்கு, நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் அனுப்பப்படுகின்றனர். … Read more17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்!

பொக்ரானில் வெடிகுண்டு சோதனை….வெற்றி வெற்றி…!

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு சோதனை வெற்றி அடைந்தது.  ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 30 கிலோ மீட்டர் இலக்கை  நோக்கி செலுத்தி வெடிகுண்டு சோதனை, நவீன வெடிகுண்டு சோதனை பாதுகாப்பு துறையால் இன்று  நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 30 கிலோ மீட்டர் இலக்கை துல்லியமாக தாக்கியது. இதையடுத்து, இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது.   newstm.in newstm.in Source link

குழந்தைகள் விற்பனை வழக்கு – 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு | Children’s sale Case

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 7 பேரின் நீதிமன்ற காவல் ஜூன் 6-ஆம் தேதி வரை  நீட்டித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முருகேசன், அருள்சாமி, சாந்தி, ஹசீனா, பர்வீன், செல்வி, லீலா ஆகியோரின் நீதிமன்ற காவல் ஜூன் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   newstm.in Source link

குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. அதன்பின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த, பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மோடியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 16-ஆவது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி வழங்கினார். 17-ஆவது மக்களவையை ஏற்படுத்தவும் அவர் கோரினார். நரேந்திர மோடி வரும் 30 -ஆம் தேதி,  நாட்டின் பிரதமராக மீண்டும் … Read moreகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

மத்தியப் பிரதேசம் : தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்த நியூஸ்டிஎம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளிலும். காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.   தேர்தல் முடிவின்படி அங்கு 28 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. newstm.in Source link

கருணாநிதி பிறந்தநாளன்று நன்றி தெரிவிக்கும் கூட்டம் – திமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி சேர்த்து மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.  ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் அன்று சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக & … Read moreகருணாநிதி பிறந்தநாளன்று நன்றி தெரிவிக்கும் கூட்டம் – திமுக அறிவிப்பு!

சூரத் தீ விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு: ராகுல் காந்தி இரங்கல்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். சூரத் நகரில் நடந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   newstm.in Source link