“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் நீதித் துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்கான அணுகல் எனும் நடமாடும் சேவை வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வை நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் கடற்றொழில் அமைச்சர் … Read more

டெங்கு நோய் : தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

நாட்டில் டெங்கு நோய் அதிகரித்து வருவதால் அனைத்து அரச நிறுவகங்களின் பங்களிப்புடன் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வெற்றிகரமான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலகம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: AKM/Logini Sakayaraja  

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – சுகாதார அமைச்சினால் மாத்திரம் தனித்து மேற்கொள்ள முடியாது

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார அமைச்சினால் மாத்திரம் தனித்து நடைமுறைப்படுத்த முடியாது என்று டெங்கு ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து நிறுவகங்கள், நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கும் இது தொடர்பில் பொறுப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்ற டெங்கு நோய் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை வலுவூட்டுதல் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது … Read more

நாட்டுக்கும் மக்களுக்கும் நலன் வேண்டி ஜய பிரித் பாராயணம்…

நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன் வேண்டி, பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ‘ஜய பிரித் பாராயணம்’ புண்ணிய நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களது தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றது. மஹாநாயக்கர்கள், மற்றும் அனுநாயக்கத் தேரர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்த ஆயிரம் பிக்குமார்களின் பங்குபற்றுதலுடன், இந்த ஜய பிரித் பாராயணம் இடம்பெற்றது. உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள், அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் … Read more

தபால் நடவடிக்கைகளை விரிபடுத்தி டிஜிட்டல் மயப்படுத்த திட்டம் – தபால் மா அதிபர்

“21 ஆம் நூற்றாண்டில் செயல் திறன் மிக்க தபால் சேவையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தபால் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்வரும் சில மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற தபால் திணைக்களத்தினால் அஞ்சல் குறியீட்டு விபரக்கொத்து வெளியீட்டு நிகழ்வில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விபரக்கொத்தில்  ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திற்கும், உப அஞ்சல் அலுவலகத்திற்கும், ஒரு குறியீட்டு எண் குறிக்கப்பட்டுள்ளன.. இதனூடாக கடிதங்கள் … Read more

27.01.2022 ஆம் திகதிக்கு முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை : 6 ,06162

தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து 27.01.2022 ஆம் திகதிக்கு முழு தொற்றாளர்களின்எண்ணிக்கை : 6,06, 162  

நீதிக்கான பிரவேசம் நடமாடும் சேவை : எமது மாவட்டத்திற்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும் – அரசாங்க அதிபர்

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு நீதிமன்ற அபிமானத்திற்கு வடமாகாண மக்களுக்கான நீதிக்கான பிரவேசம் என்ற நடமாடும் சேவை எமது மாவட்டத்திற்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு நீதிமன்ற அபிமானத்திற்கு வடமாகாண மக்களுக்கான நீதிக்கான பிரவேசம் என்ற நடமாடும் சேவை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பமானது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதி அமைச்சினுடைய பல்வேறு வகையான திணைக்களங்கள் மக்களுக்கு … Read more

தற்போதைய முன்முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜனவரி 26ஆந் திகதி உரையாற்றினார். தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியாக, முழு இராஜதந்திரப் படையினரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் … Read more

அரசின் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவில் ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்! செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சிடம் கோரிக்கை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென பெந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். சமகால பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு விரைவாக அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா … Read more