திருநெல்வேலி: `தாமிரசபை' செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! | Photo Album

‘தாமிரசபை’ என அழைக்கப்படும் திருநெல்வேலி செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! Source link

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 2 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

Desingu raja 2: "பூவெல்லாம் உன்வாசம் சமயத்தில் தெரியல; ஆனா, இப்போ…" – வித்யாசாகர் குறித்து எழில்

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய இயக்குநர் எழில், பின்பு மனம் கொத்திப்பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வெள்ளைக்கார துரை, தேசிங்கு ராஜா போன்ற காமெடி படங்களையும் இயக்கினார். இந்தப் படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகம் தேசிங்கு ராஜா-2 உருவாகியிருக்கிறது. Desinguraja-2 இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, விஜய் டிவி … Read more

வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ்

வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர் … Read more

குட் டே விமர்சனம் : ஓர் இரவின் கலவரமும், அதனுள் மறைந்திருக்கும் மனிதத்தின் பயணமும்

திருப்பூரின் பரபரப்பான ஜவுளித் தொழிற்சாலையில், சூப்பர்வைசராக இருக்கிறார் சாந்தகுமார் (பிருத்விராஜ் ராமலிங்கம்). அவரது மோசமான ஒரு நாளில், பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், தொலைபேசியில் மனைவியின் வசைபாடுதல் ஆகியவை மன அழுத்ததுக்குக் கொண்டு செல்ல, தனது அறையில் தனியாக மது அருந்துகிறார். அதன்பின்பு போதையினால் ஏற்பட்ட விளைவால், வீட்டு உரிமையாளரிடம் சண்டை, முன்னாள் காதலிக்கு தொலைபேசியில் அழைப்பு என அடுக்கடுக்காக அலப்பறைகளைக் கூட்டுகிறார் சாந்தகுமார். இதன்பின்னர், அந்த ஓர் இரவில் நடக்கும் நிகழ்வுகள், அவர் வாழ்வில் என்ன … Read more

Desinguraja 2 : “உன்னையெல்லாம் யார்டா வில்லனா போட்டது என எழில் சார் திட்டினார்" – ரவி மரியா

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்கிய இயக்குநர் எழில் இயக்கியிருக்கும் படம் தேசிங்கு ராஜா-2. ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. Desinguraja-2 audio launch அதில் பேசிய ரோபோ சங்கர், “கால் நூற்றாண்டையும் கடந்து காமெடியில் டஃப் கொடுக்கும் ஒரே இயக்குநர் எழில்சார். குழந்தைகளுக்கு மத்தியில் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்தான். … Read more

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" – ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு 5 போலீஸார் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்புவனம் லாக்கப் டெத் – ஸ்டாலின் மேலும், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரனை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். மறுபக்கம், இந்த … Read more

Maargan: 'அந்தக் கதையைக் கேட்டு அழுதேன்' – மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பேசியது என்ன?

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் ‘மார்கன்’. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று ( ஜூலை 1) நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி, “ நிறைய வெற்றி படங்கள், தோல்வி படங்களைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. மார்கன் எந்த ஒரு படமும் ஹீரோவால் ஓடாது. கடவுளே வந்து நடித்தால் கூட … Read more

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" – ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவரை இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக அஜித்குமார் சனிக்கிழமை அன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அஜித்குமாரின் மரணத்துக்குப் பிறகான எஃப்.ஐ.ஆரில், நகையைத் திருடியதை அஜித்குமார் ஒப்புக்கொண்டதாகவும், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு … Read more