Team India: இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி இந்த 5 பேரில் யாருக்கு?

புதுடெல்லி: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஜனவரி 15 அன்று ராஜினாமா செய்தார். காலியாக இருக்கும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக, இந்த ஐவரில் ஒருவரே மகுடம் சூடுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.   ரோஹித் சர்மா? ரோஹித் அடுத்த டெஸ்ட் கேப்டனாவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். அவர் இன்னும் டெஸ்டில் அச்சுறுத்தும் சக்தியாக இல்லை என்ற வாதங்கள் இருந்தாலும்,  2019 ஆம் ஆண்டின் இறுதியில் தொடக்க ஆட்டக்காரராக பதவி உயர்வு பெற்ற … Read more

திருப்பூர் நகரில் சிறுத்தை தாக்குதல்! தீவிரமாகும் கண்காணிப்பும் வேட்டையும்

திருப்பூர்: இன்று திருப்பூர் – அம்மாபாளையம் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றில் புகுந்த சிறுத்தை, அங்கு பணியில் இருந்த ராஜேந்திரன் என்பவரை தாக்கியது.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. அவிநாசி அருகே பாப்பான்குளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பொங்குபாளையத்தில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் கழிவு … Read more

வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி லாவண்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவர் தற்கொலைக்கு முன்பு பேசியதாக ஒரு வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவியது. அந்த வீடியோவை குறிப்பிட்டு, மாணவி லாவண்யா மதமாற்றம் தொல்லை காரணமாக இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்குரல் எழுப்பப்பட்டது.  ALSO … Read more

பாடாய் படுத்தி ஒரு வழியாய் பிடிபட்டது சிறுத்தை: நடந்தது என்ன? முழு விவரம் இதோ

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுக்கா பாப்பாங்குளம் எனும் பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை புகுந்த சிறுத்தை, நான்கு நாட்களாக  பிடிபடாமல் இருந்த நிலையில் இன்று மதியம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்டது ஆண் சிறுத்தை என்றும், உடுமலைப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்த பிறகு எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவு செய்யப்படும் என்றும் வனமருத்துவர்கள் கூறியுள்ளனர்.  கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியளவில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுக்கா … Read more

சேலத்தில் ’சதுரங்க வேட்டை’.. லட்சக்கணக்கில் மோசடி..! இரவோடு இரவாக காலியான நகைக்கடை

2014 ஆம் ஆண்டு வெளியான ’சதுரங்க வேட்டை’ திரைப்படம் மக்களை முட்டாளாக்கி விதவிதமாக ஏமாற்றும் மோசடி கும்பலின் கைவரிசைகளை பட்டவர்த்தனமாக அம்பலபடுத்தியது. அந்த திரைப்படம் வந்து சுமார் 7 ஆண்டுகள் ஆன பிறகும் மோசடி கும்பல்களின், தகிடு தத்தங்களுக்கு ஏமாறும் மக்களின் போக்கும் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. சேலத்தில் இப்போது அரங்கேறியிருக்கும் மோசடிசயும் சதுரங்க வேட்டையில் இடம்பெற்றிருக்கும் மோசடியே. ஏலச்சீட்டு, நகைச்சீட்டு எனும் பெயர்களில் மக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்த மோசடி தம்பதி, இரவோடு இரவாக நகை … Read more

"உல்லாச விருந்து" மயங்கிய அரசியல் தலைவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்!

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் சேலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்தரங்க வீடியோ எடுத்த அரசியல் பிரமுகர்கள் சிலரை அந்த பெண் மிரட்டியதாகவும் சேலம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பிரபலமாக இருக்கும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 6 அரசியல் பிரமுகர்களை தேர்வு செய்து அதில் 3 பேரை மடக்கி அவர்களிடம் போனில் கலைச்செல்வி தொடர்ந்து சாட் செய்து வந்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் பேசி நெருக்கம் … Read more

Netflix, Hotstar-க்கு ஆஃபர்களை அள்ளி வழங்கும் TATA sky..! மிஸ் பண்ணிடாதீங்க

இந்தியாவின் மிகப்பெரிய டிடிஹெச் நிறுவனங்களுள் ஒன்றான டாடா ஸ்கை நிறுவனம், ’டாடா ப்ளே’ என்ற புதிய பெயருடன் புத்தம் புதுப்பொலிவுடன் சந்தையில் களமிறங்கியுள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஓடிடி ப்ளாட்ஃபார்மில் கோலோச்சிக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களின் சந்தாக்களை அட்டகாசமான ஆஃபரில் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. ஓடிடி ஆஃபர்களைப் பொறுத்தவரை Binge சேவையில் இருக்கும் OTT இயங்குதளங்கள் மற்றும் சாதாரண டிவி சேனல்கள் என இரண்டுக்கும் இந்த ஆஃபர் கிடைக்கும்.  ALSO READ | ஒருமுறை சார்ஜ் 180 கிமீ தூரம் … Read more

Bigboss: பற்றவைக்க தயாராகும் சுரேஷ் தாத்தா.. ஆட ரெடியாகும் அபிராமி..!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோ இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. 5 சீசன்களில் பிக்பாஸ் வீட்டில் அமர்களப்படுத்திய ஸ்டார் போட்டியாளர்கள், இந்த பிக்பாஸ் அல்டிமேட்டிலும் களமிறங்க உள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட சிநேகன் மற்றும் ஜூலி ஆகியோர் அறிமுகப்படுத்தபட்டனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 3வது போட்டியாளராக வனிதா விஜயக்குமாரும் இந்த ரேஸில் களமிறங்கியுள்ளார். #BBUltimate-ல் சுரேஷ் சக்ரவர்த்தி !! #YaaruAnthaHousemate pic.twitter.com/4AMnHh08Eo — Disney+ Hotstar … Read more

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு – முழுவிவரம் இதோ..!

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றுக்கு தளர்வுகளை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் (28.01.2022) முதல் இரவு ஊரடங்கு ரத்து என அறிவித்துள்ள தமிழக அரசு, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கும் கிடையாது என அறிவித்துள்ளது.  ALSO READ | தொற்று எண்ணிக்கையில் ஏற்றம், கட்டுப்பாடுகளில் தளர்வு: நெதர்லாந்தின் வினோத முடிவு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1 முதல் 12 ஆம் வகுப்பு … Read more

ஒருமுறை சார்ஜ் 180 கிமீ தூரம் பயணம்! வெறும் ரூ.999 செலுத்தி புதிய பைக்…

நாட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் தங்களது எலக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. அதில் டார்க் கிராடோஸ் (Tork Kratos) என்ற புதிய இருசக்கர வாகனமும் சேர்க்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பு நிறுவ்னமான டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) , இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் கிராடோஸ் (Kratos) மற்றும் கிராடோஸ் ஆர் (Kratos R) என இரண்டு வகைகளில் கவர்ச்சிகரமான வடிவமைக்கப்பட்ட மற்றும் நீண்ட தூரம் அதிக மைலேஜ் … Read more