‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம் நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது – ஜனாதிபதி

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்  என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பஸ் சாரதிகள் முன்னிருக்கைப் பாதுகாப்பு பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டது

பஸ்களை செலுத்தும் போது ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று [01] முதல் பஸ் சாரதிகள் முன்னிருக்கை பாதுகாப்புப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொப்புரு மீனின் கொம்பு குற்றியதில் மீனவர் மரணம்.

ஆழ்கடலில் வைத்து மீன் குற்றி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்த தொடர்புள்ள தரப்பினர்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரை தெளிவுபடுத்தும் மூன்று நாள் நிகழ்ச்சி நேற்று (03) அலரி மாளிகையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

சட்ட விரோதமான போதைப்பொருள் தொடர்பாக விசேட சோதனை நடவடிக்கை

கல்கிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிடிய, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா பொலிஸ், ஸ்ரீ லங்கா பொலிஸ் விசேட அதிரடிப் படை, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஒன்றிணைந்து நேற்று (06) கலகிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிட்டி, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உறுதி..

இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நேபாளத் தூதுவர் பூர்ணா பகதூர் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 12 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார்.