இலங்கையில் ஐந்து இடங்களில், இவ்வருடத்துக்கான காந்தி ஜெயந்தி

இலங்கையிலுள்ள ஐந்து வெவ்வேறு இடங்களில் இவ்வருடத்துக்கான காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற உயர் ஸ்தானிகர் இக்கொண்டாட்டங்களுக்கு தலைமைவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேல் மாகாணத்திற்கான கொண்டாட்டங்கள் கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றிருந்தன. யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்கள் மற்றும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை முறையே நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இந்நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பணவீக்கம் 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதத்தைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 64.3 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தில் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஓகத்தின் 93.7 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 94.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 50.2 … Read more

இலங்கையின் மோசமான நிலைக்கான பிரதான நபர்களை அம்பலப்படுத்தி மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கையிலுள்ள தொழில் வல்லுநர்கள் முறையான முறையில் வரி செலுத்தியிருந்தால், இலங்கையின் பொருளாதாரத்தில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணம் இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவிடப்படுகிறது.  ஆனால், ஒரு வைத்தியர் தனது தொழிலில் குறைவான வரியை செலுத்துவதாகவும் … Read more

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள்: உள்ளூர் வர்த்தகர்கள் விசனம்

உள்ளூர் வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிய 50க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொள்கலன்களில் உணவுப் பொருட்கள்,அழகுசாதனப் பொருட்கள், விழாக்களில் பயன்படுத்தப்படும் செயற்கை மாலைகள் ,மஞ்சள் மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பல பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வர்த்தகர்கள் விசனம் இந்தநிலையில் பொருட்கள் கப்பலில் இருந்து இறக்கப்படாமையால், கோயில் விழாக்களின் போது, தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செயற்கை மாலை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில கொள்கலன்களில் இறக்குமதி கட்டுப்பாடுகளின் … Read more

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் சுமார் 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு!

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல மனிதாபிமான உதவி அமைப்புகளுடன் இணைந்து, இலங்கைக்கு மருந்துகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதுவரை, 03 தடவைகளில், சுகாதார அமைச்சுக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் இறுதிக் கட்டமாக இன்னுமொரு தொகை மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்று (02) இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை … Read more

சுகாதார அணையாடைகளை (Sanitary Napkin ) உள்நாட்டில் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப்பொருள் வரிகளும் நீக்கம்.

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. • இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு (Sanitary Napkin ) வரிச் சலுகைகள் வழங்கப்படும் • வரிச் சலுகை உடனடியாக நுகர்வோருக்கு   இதேவேளை, … Read more

கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற மேன்முறை

கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் 2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடுகளை இம் மாதம் 13ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ. மன்சுர் தெரிவிக்கையில்,2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபாரிசு செய்யப்பட்ட இடமாற்றப் பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபாரிசு … Read more