டிக்டாக்கை வாங்கும் பந்தயத்தில் ஆரக்கிள் நிறுவனம் இணைகிறதா? 

டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்கா உள்ளிட்ட இன்னும் சில நாடுகளின் பிரிவுகளை வாங்க அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளதாகவும், பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது. டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவை 90 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆணையைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் முன்னணியில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனமும் டிக்டாக்கை வாங்க முயற்சித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. … Read more

Tiago Vs WagonR Vs Santro CNG: உங்களுக்கான சிறந்த கார் எது? முழு ஒப்பீடு இதோ

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில், ஆரம்பம் முதலே சிஎன்ஜி கார்களை வாங்குவதில் பல தவறான எண்ணங்களும், கேள்விகளும், குழப்பங்களும் மக்களிடையே இருந்து வருகிறது.  இதை தெளிவுபடுத்தும் வகையில், சில அருமையான சிஎன்ஜி கார்களைப் பற்றி இந்த பதிவில் காணவுள்ளோம். இவற்றின் ஆரம்ப விலை 7 லட்ச ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இந்த CNG கார்களில் ஹூண்டாய் சான்ட்ரோ CNG, Tata Tiago CNG மற்றும் Maruti Suzuki WagonR CNG ஆகியவை உள்ளன. … Read more

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு வரவேற்பு அதிகரிப்பு

டிக்டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. டிக்டாக் உட்பட சீன நாட்டைச் சேர்ந்த பல்வேறு செயலிகள் அண்மையில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், டிக்டாக் போலவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்கிற காணொலிப் பகிர்வு தளத்தை அறிமுகம் செய்தது. டிக்டாக் இல்லாத நிலையில் அது ரீல்ஸ் செயலிக்கு சாதகமாக அமைந்துள்ளது. 18லிருந்து 29 வயது வரை இருக்கும் இளைஞர்களில், 10ல் ஏழு பேர் ரீல்ஸ் செயலியை விரும்புவதாகக் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட … Read more

Flipkart-ல் சலுகை மழை: மிகக்குறைந்த விலையில் iphone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு

Flipkart Offers: பிளிப்கார்ட் ஆப்பிள் சாதனங்களின் சீரிஸில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்குகிறது. ஆப்பிள் ஐபோன் 13, 12 மற்றும் 12 மினியிலும் எக்ஸ்சேஞ்ச் சலுகை, கேஷ்பேக் சலுகை ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன.  iPhone SEக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 13 பிளிப்கார்ட்டில் (Flipkart) ரூ.74,990க்கு விற்கப்படுகிறது. எனினும், இதை ரூ.58,300-க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். ஈ-காமர்ஸ் இயங்குதளமான பிளிப்கார்ட், பழைய ஐபோன் 11 ஐ 16,600 ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறது.  iPhone SE 2020 … Read more

ஜிமெயில், ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் பாதிப்பு: மின்னஞ்சல் அனுப்புவதில் சிக்கல்

ஜிமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை, ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் சரியாக வேலை செய்யவில்லை எனப் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர். இப்படியான சேவைகள் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கும் தி டவுன் டிடெக்டர் போர்டல் என்கிற தளம், 62 சதவீத பயனர்களுக்கு இணைப்போடு வரும் மின்னஞ்சலிலும் இருப்பதும், 25 சதவிதம் பயனர்களுக்கு லாக் இன்னிலும் பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று … Read more

40 சதவீத உணவகங்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: ஸொமேட்டோ அறிக்கை

ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு பெறும் சேவை தொடர்ந்து இயங்கி வரும் வேளையில் இந்திய அளவில் வெறும் 8-10 சதவீத உணவகங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருவதாக ஸொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் நெருக்கடி காரணமாகத் தேசிய அளவில் ஊரடங்கு பல நிலைகளில் அமலில் உள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வியாபாரங்களில் ஒன்று உணவகங்கள். இந்த பாதிப்பு குறித்தும், கோவிட் நெருக்கடிக் காலம் முடிந்து என்ன நடக்கலாம் என்பது குறித்தும் ஸொமேட்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. … Read more

கூகுள் சேவைகளைத் தொடர்ந்து வாட்ஸ் அப் சேவையும் பாதிப்பு

ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப் செயலி பயன்பாடு வியாழக்கிழமை அன்று பாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் பல பயனர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளனர். முன்னதாக வியாழக்கிழமை காலை அன்று கூகுளின் ஜிமெயில், ட்ரைவ் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. வியாழனன்று மாலை வாட்ஸ் அப் செயலி முடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர். இது குறித்துக் கூறியுள்ள தொழில்நுட்ப இணையதளம் ஒன்று, “சில பயனர்களுக்கு வாட்ஸ் … Read more

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய மொபைல் அறிமுகம்: விலை ரூ.1,599

உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் அம்சங்களுடன் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. பல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த மொபைலின் விலை ரூ. 1,599. அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் மொபைல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும். 2.4 இன்ச் திரையுடன் இருக்கும் இந்த மொபைலில் 32 ஜிபி வரை கொள்ளளவை மெமரி கார்ட் கொண்டு விரிவாக்கிக் கொள்ளலாம். எஃப்.எம் ரேடியோ மற்றும் இரண்டு சிம் வசதிகளையும் கொண்டுள்ளது. 1800எம்.ஏ.ஹெச் … Read more

நோக்கியா அறிமுகம் செய்யும் 2 புதிய மொபைல்கள் 

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் புதிதாக இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய காணொலி முன்னோட்டம் ஒன்றை அந்நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தக் காணொலியில் புதிய மொபைலின் தோற்றம் இடம்பெறவில்லை. மாறாக மொபைல் அளவிலான ஒரு கோடு மட்டுமே வரையப்பட்டுத் தோன்றுகிறது. அந்த அளவை வைத்துப் பார்க்கும்போது இது நோக்கியா சி 3 மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது. இன்னொரு மொபைல், அடிப்படை வசதிகள் கொண்ட கீபேட் மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது. … Read more

குழு அழைப்புகளுக்கு தனி ரிங்டோன், அனிமேட் ஆகும் ஸ்டிக்கர்கள்: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

குழு அழைப்புகளுக்குத் தனி ரிங்டோன், அனிமேட் ஆகும் ஸ்டிக்கர்கள் என அடுத்தகட்ட அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் அப் செயலியின் ஆண்ட்ராய்ட் பதிப்பில் சில புதிய அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக, வாட்ஸ் அப்பின் புதிய அம்சப் பரிசோதனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் WABetainfo இணையதளம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் 2.20.198.11 பதிப்பில் இந்தப் புதிய அம்சங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும். அசைவின்றி இருக்கும் ஸ்டிக்கர்கள் ஏற்கெனவே வாட்ஸ் அப்பில் உள்ளன. தற்போது புதிய அப்டேட்டில் அனிமேட் … Read more