அரசு விரைவு பேருந்துகள் உணவு இடைவேளைக்கு எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும்! பட்டியல் வெளியீடு

சென்னை: அரசு  விரைவு பேருந்துகள், வழியில் பயணிகள் சிற்றுண்டி மற்றும் உணவுகள் அருந்த எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை அரசு போக்குவரத்துக்கு துறை வெளியிட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள், உணவு இடைவேளையின்போது, தரமற்ற சாலையோர உணவகங்களில் நிறுத்தி விடுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து  ஆய்வு செய்த போக்குவரத்துறை அதிகாரிகள், அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் இடங்களை ரத்து செய்தனர்.

இந்த நிலையில், தற்போது எந்தெந்த உணவகங்களில் உணவு இடைவேளைக்கு நிறுத்தலாம் என்பது குறித்த பட்டியல் மாநில போக்குவரத்து துறை வெளியிடப்ட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இந்த தொலைதூர பேருந்துகளை நிறுத்துவதற்காக 18 உணவகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 18 உணவகங்களில் மட்டுமே பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துனருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாலாஜி ஆர்யாஸ், பிரசன்ன பவன், ஏ1 வசந்த பவன் என்ற 3 நிறுவனங்களை சேர்ந்த 18 உணவகங்கள் தற்போது போக்குவரத்துக்கு துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லக்கூடிய பேருந்துகள் வசந்த பவன் உணவகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும்,

சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லகூடிய பேருந்துகள் பிரசன்ன பவன் என்று சொல்லக்கூடிய உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையல்லாமல் வேறு பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி, பயணிகளை உணவு சாப்பிட கட்டாயப்படுத்தினால் அந்த ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை நோக்கி வரக்கூடிய பேருந்துகள் அனைத்தும் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் நடுவில் இருக்கக்கூடிய ஸ்ரீ பாலாஜி ஆர்யாஸ் என்ற உணவகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். திருச்சி மற்றும் சேலம் மார்க்கமாக மட்டுமே இந்த அரசு விரைவு போக்குவரத்துக்கு கழகத்தை சேர்ந்த தொலைதூர பேருந்துகள் இயங்குகின்றன.

இந்த பேருந்துகள் இனி 3 நிறுவனங்களைச் சேர்ந்த 18 உணவகங்களில் மட்டுமே நிறுத்த முடியும்; இந்த உணவகங்கள் அனைத்தும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனத்தை தாண்டி அமைந்திருக்கின்றன.

இந்த உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிற நிலையில், அந்த 18 உணவகங்களிலும் தொடர்ந்து உணவுப் பொருள் பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்துவார்கள், கட்டணம் தொடர்பாக போக்குவரத்துக்கு துறையினர் ஆய்வு நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகள் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.