ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து தலைமைப்பயற்சியாளர் விலகல்

லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒரு போட்டியை போராடி டிரா செய்தது.

ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் ஜோ ரூட் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஆஷ்லே ஜைல்ஸ் விலகிய நிலயில், இங்கிலாந்து அணியின் தலைமைப்பயிற்சியாளர் சில்வர் வுட் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து சில்வர்வுட் கூறும் போது, ‘இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய கவுரவம். இங்கிலாந்து வீரர்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து பணியாற்றியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அணியுடன் எனது நேரத்தை மிகவும் ரசித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.