இந்திய ராணுவ தளபதி சொல்வது சரியல்ல:பாக்.,| Dinamalar

இஸ்லாமாபாத்:காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ தலைமை தளபதி திசை திருப்பும் வகையில் பேசியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது.
கடந்த, 2021 பிப்.,ல் காஷ்மீர் அருகே எல்லை கட்டுப்பாடு கோட்டில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இந்தியா – பாக்., இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இது குறித்து ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறும்போது, ”இந்தியா வலிமையாக உள்ள காரணத்தால் நம் கொள்கைப்படி போர் நிறுத்தப் பேச்சு நடத்தப்பட்டு வெற்றிகரமாக அமலில் உள்ளது,” என்றார்.
இதை மறுத்து பாக்., ராணுவ மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் கூறியதாவது:போர் நிறுத்தப் பேச்சு குறித்து நரவானே திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார். எல்லை கட்டுப்பாடு கோட்டின் இருபுறத்தில் வசிக்கும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு கருதியே போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாக்., ஒப்புக் கொண்டது. இதில், எந்த தரப்பும் தனக்கு வலிமை உள்ளது என்றோ அல்லது எதிர் தரப்பு பலவீனமாக உள்ளது என்றோ கருதுவது தவறாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.