கரோனாவால் 5 லட்சம் பேரை இழந்த 3-வது நாடு இந்தியா: பிரேசில் இரண்டாவது இடம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலை களினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப் பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத் தும் பணிகளை தீவிரப்படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்து தொற்று பரவலால் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நாட்டில்கரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத் தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேர் உயிரி ழந்துள்ள நிலையில் நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,00,055 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,71,50,412 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 9,20,829 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 2,60,99,735 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 6,30,001 ஆகவும் இரண்டாவது இடத்திலும் உள்ளது. தற்போது 3-வது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 1,49,394 பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு 1.72 லட்சமாக இருந்த நிலையில், நேற்று 1.5 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 52 ஆயிரத்து712 ஆக உயர்ந்துள்ளது என்றுமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.-பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.