வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறினார்.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மேலும் கூறியதாவது:குருவின் மூலமாகத்தான் நாம் அறிவை பெறுகிறோம். ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கட்டும். ராமானுஜரின் தைரியம், கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களை பின்பற்றுவோம். இந்த சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும் .உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வணக்கங்கள் .108 திவ்ய தேசங்களில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றது எனது பாக்கியம் இங்கு நடந்த லட்சுமி நாராயண யாகத்தின் பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். உலகின் மிக பழமையான நாகரிகம் கொண்ட நாடு இந்தியா. எந்தவிசயங்களை நாம் ஏற்க வேண்டும் என கூறியவர்கள் ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்கள். ராமானுஜரின் அறிவு மிகவும் உன்னதமானது. அவர் பல விசயங்களை எளிமையாக ஒரே நூலில் தெரிவித்து உள்ளார். பகவத் கீதையின் கருத்துக்களை ராமானுஜர் நமக்கு கூறி இருக்கிறார். தமிழில் பல முக்கியமான படைப்புகளை ராமானுஜர் அருளி இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Advertisement