"சூரியை என் வாழ்க்கை முழுக்க மன்னிக்கவே முடியாது"- விஷ்ணு விஷால்

நல்ல கதைகள் கொண்ட கதாபாத்திரங்களை செலக்ட் பண்றேன்னு கேக்குறப்போ ஹாப்பியா இருக்கு. ஆனா,  டைரக்டர்ஸ் முதல் படத்தை என்னோட பண்ணிட்டு அடுத்து உடனே பெரிய ஸ்டார் படங்களுக்கு போராங்கனு நினைக்கிறப்போ வருத்தமா இருக்கு. ஏன்னா, அடுத்து புதிய இயக்குநர்கள் தேட வேண்டியது இருக்கு. நூறு கதைகள் கேட்க வேண்டியிருக்கு. நான் யாரையும் தப்பு சொல்லல. உண்மையைச் சொல்லணும்னா கொஞ்சம் வலிக்கும் ‘என் கூட இன்னொரு படம் பண்ணியிருக்கலாமே’னு.

‘ராட்சன்’ மாதிரி ஒரு படம் ஹிட்டாகிகூட எட்டு படம் எனக்கு டிராப் ஆச்சு. ‘நான் என்ன தப்பு பண்ணினேன்னு வருத்தமா இருந்தது. ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படம் ஏழு படத்தோட ரிலீஸ் ஆச்சு. சரியா போகல. இதை வெச்சிட்டு என்னை கால்குலேட் பண்ணத் தொடங்கிட்டாங்க. விஷ்ணு விஷாலுக்கு அவ்வளவுதான் பிசினஸ்ன்னு பேசிக்கிட்டாங்க. எனக்கு வளரணும் படம் பண்ணணும்னு ஆசை. இப்போகூட ‘FIR’ படத்திற்கு வேறொரு புரொடியூசர் வந்தார். ஆனா, டிராப் ஆகிருச்சு. அப்புறம் நானே புரொடியூசரா வந்தேன். கிட்டத்தட்ட மூணு கொரோனா பார்த்துட்டுதான் இந்தப் படம் வெளியே வருது. தமிழில் உதயநிதி மற்றும் தெலுங்கில் ரவி தேஜா ரிலீஸ் பண்றாங்க. நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் விஷ்ணு விஷால்.

‘FIR’ கதையை செலக்ட் பண்ண காரணம் என்ன?

FIR

“டைரக்டர் முதல்ல வேறொரு கதை சொன்னார். ‘ஹீரோயிஸம் அதிகமா இருக்கு’ வேண்டாம்னு சொல்லிட்டேன். ஏன்னா, எங்கையாவது ஸ்லிப் ஆகிட்டா அடி பலமா இருக்கும். கிரிக்கெட் பற்றி நல்லா தெரியும். பேட் கொடுத்துட்டுட்டா ஆடுவேன். ஆனா, சினிமா அப்படியில்ல. கேமரா, ரோலிங் சொன்னா பயம் வரும். இப்பதான் எனக்கு தைரியம் வந்திருக்கு. ‘ராட்சன்’ பயத்தைப் போக்கிருக்கு. பயம் விலகி பதட்டம் மட்டும் இருக்கு. இயக்குநர் மனு ஆனந்த் ‘FIR’ கதையைச் சொன்ன உடனே ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, என்னோட நெருங்கிய நண்பன் சையத் முஹம்மது. இருபது வருட நண்பன். அவனும் கிரிக்கெட் பிளேயர். பெங்களூரு அணிக்கு ஆடியிருக்காங்க. சச்சின் டீம் விக்கெட் எடுத்திருக்கான். சில காரணங்களால் சையத்னால கிரிக்கெட்டைத் தொடர முடியல. இந்து, முஸ்லிம் பிரச்னைகள் குறித்து பேசியிருக்கோம். நாங்க பேசுற டிஸ்கஸ் பண்ண விஷயங்கள் எல்லாம் மனு ஆனந்த் கதை சொன்னப்போ இருந்தது. கதையை கேட்டவுடனே சையதுக்கு போன் பண்ணி சொன்னேன். படம் பார்த்துட்டு கட்டி புடிச்சிட்டு, ‘ரொம்ப பெருமையா பீல் பண்றேன்னு’ சொன்னார். “

தமிழில் உதயநிதி படத்தை வெளியிடுகிறாரே?

கொரோனா பாதிக்கப்பட்டு ரெஸ்ட்ல இருந்தப்போ, ‘படம் பார்த்தேன் டா, சூப்பரா இருக்கு. கண்டிப்பா நல்லா போகும். பெரிய செலவு பண்ணியிருக்க. நேரம் வர்றப்போ ரிலீஸ் பண்ணலாம்’னு உதயநிதி சொன்னார். ‘தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ண விருப்பமா’னு கேட்டார். ‘ஆமா அண்ணே’ னு சொன்னேன். கரெக்ட் தான், கொஞ்சம் டைம் எடுக்கும் வெயிட் பண்ணு’சொன்னார். ‘ஜூன் வரைக்கும்கூட வெயிட் பண்றேன்’ னு சொன்னேன். ஏன்னா, மேஜிக் நடக்கும்னு நம்பிக்கை இருந்தது. திரும்பவும் உதயநிதி அண்ணா போன் பண்ணி, ‘தியேட்டர் கிடைக்கிற மாதிரியிருக்கு’னுனார். இப்போ ரிலீஸாகப் போகுது. உலக சினிமா பார்க்குற ஆடியன்ஸ் அதிகம். இவங்களை சர்ப்ரைஸ் பண்ற மாதிரி எடுக்கலைனா தோத்துருவோம். இந்தப் படம் முழுக்க சர்ப்ரைஸ் இருக்கு. நல்ல படம் பார்த்த பீல் கண்டிப்பாக கிடைக்கும்.

தெலுங்குல நடிகர் ரவி தேஜா படத்தை வெளியிடுறார். அவர் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?

விஷ்ணு விஷால்

“அவருக்கு ‘ராட்சசன்’ ரொம்பப் பிடிக்கும். என்னோட மனைவியின் ப்ரெண்ட் ரவிதேஜா கிட்ட வொர்க் பண்றாங்க. எங்களுக்கு, ரவிதேஜா கிட்ட மீட்டிங் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. ‘என்ன போயிட்டு இருக்குன்னு’ கேட்டார். ‘FIR’ மற்றும் ‘மோகன்தாஸ்’ பற்றி சொன்னேன். டீசர், ட்ரெய்லர் பார்த்துட்டு பாராட்டினார். தெலுங்கு படம் பண்ணனும்னு சொன்னேன். தவிர, என்னோட ‘படம் பார்க்க முடியுமான்னு கேட்டேன். படம் பார்த்துட்டு, ‘உனக்கு மட்டும் எங்கிருந்து கதை கிடைக்குது’னார். இதை கேட்டப்போ சந்தோஷமா இருந்தது. ஏன்னா, தெலுங்கில் மாஸ் ஹீரோ ரவிதேஜா. ‘தியேட்டர் ரிலீஸ் பண்ணணும்னா சொல்லு’னார். சொன்னபடியே செஞ்சிட்டார். எதிர்காலத்துல ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணப் போறோம். தெலுங்கில், என்னைப் புரிஞ்சுக்கிட்ட புரொடியூசர் கிடைச்சியிருக்கார். ஹாப்பியா இருக்கு.”

கெளதம் மேனன் கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

FIR

“எப்போதும் பெரிய இயக்குநர் படத்தில் நடிக்கணும்னு நினைச்சது இல்ல. ஏன்னா, பெரிய டைரக்டர் நினைக்குறது நம்மால பண்ண முடியுமானு சந்தேகம் இருக்கும். புதிய இயக்குநர்கள் கூடவே படம் பண்ணி வந்துட்டேன். அதே மாதிரி யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டதில்ல. என்னோட முதல் படம் ரிலீஸுக்கு முன்னாடி ‘வாரணம் ஆயிரம்’ பார்த்தேன். சூர்யா சார் எப்படி கஷ்டப்பட்டு இருக்கார்னு பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஏன்னா, ‘வெண்ணிலா கபடிகுழு நடிச்சப்போ வெயில்ல கஷ்டப்படுறோம்னு நினைச்சிட்டு இருந்தேன். ‘வாரணம் ஆயிரம்’ பார்த்ததுக்குப் பிறகு நம்ம பட்டது கஷ்டமே இல்லனு தோணுச்சு. இப்போ, என்னோட பர்சனல் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் ‘வாரணம் ஆயிரம் கூட கம்பேர் பண்ணி பார்த்தேன். பிட்னஸ் பண்றப்போ படம் ஞாபகத்துக்கு வந்தது. கெளதம் சாருடைய ரசிகன் நான். கௌதம் சார் ‘FIR’ பார்த்துட்டு, “நடிகனா எனக்கு என்னை பிடிச்சிருக்குனு” சொல்லிட்டு போனார். இது சந்தோஷமா இருந்தது. படத்தோட செகண்ட் ஹீரோ கெளதம் மேனன்தான்.

’83’ படத்துல நடிச்சுருக்கலாம்னு ஃபீல் பண்ணுனது உண்டா?

இந்தப் படத்தோட ஷூட்டிங் முன்னாடியே Vishnu Vardhan Induri, ‘ஒரு படம் பிளான் பண்றோம். ஶ்ரீகாந்த் கேரக்டர் இருந்தா பண்ணுவீங்கனு’னார். அப்புறம் ஜீவா நடிக்கிறார்’னு கேள்விப்பட்டேன். படம் பார்த்தேன், ‘ஜீவா சூப்பரா பண்ணியிருந்தார். நான் நடிக்கலைனு கொஞ்சம்கூட பீல் பண்ணாத அளவுக்கு ஜீவா பண்ணியிருந்தார்.

நடிகர் சூரியோட வரும்காலங்கள்ல சேர்ந்து நடிப்பீங்களா?

விஷ்ணு விஷால்

“எங்க நட்பு முடிஞ்சிருச்சு. ஏன்னா, ஒரு விஷயம் நடந்து முடிஞ்சிருக்கு. இதுக்கு அப்புறம் நாலு வருஷம் என்கிட்ட பேசிட்டு படம் பண்ணியிருக்கார். அப்போ, மனசுல எதை வெச்சிட்டு என்கிட்ட பேசினார்னு தெரியல. இவ்வளவுதான் என்னையும் அப்பா பற்றியும் புரிஞ்சிக்கிட்டாரா, எங்க வீட்டுல வந்து சாப்பிட்டு இருக்கார். சூரி கொடுத்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த வலியை மறக்க மாட்டேன். ஏன்னா, சூரி என்னைப் பற்றி மட்டும் பேசல. என்னோட அப்பா பற்றி பேசிட்டார். அப்பா அவ்வளவு சூரிக்கு பண்ணியிருக்கார். ஈஸியா பிரஸ் மீட்ல சூரிக்கு பதில் சொல்ல முடியும். இதை ஏன் பண்ணலைன்னா எங்க உறவு முடிஞ்சிருச்சு. இப்போ உலகத்துக்கு மட்டும் தான் பதில் சொல்லணும். உலகம் என்ன பதில் சொன்னாலும் போலீஸ் பேக் க்ரவுண்ட் இருந்து வர்றதுனால நம்பாது. என்ன சார்ந்த சிலருக்கு கண்டிப்பா எங்களைப் பற்றித் தெரியும் . நாங்க, சூரியை ஏமாத்தி காசு சம்பாதிக்கணும்னு அவசியமில்ல. எங்க அப்பா பார்க்காத ஆளில்ல. பெரிய பதவியில் இருந்தவர். சூரி மாதிரியான ஆளு கிட்ட இதெல்லாம் பண்ணணும்னு எங்களுக்கு அவசியமில்லை. சோறு போடும் தன்மானம் வைராக்கியம் அப்பாக்கிட்ட இருக்கு. சூரி எப்படி வந்தார்னு எனக்குத் தெரியாது. அப்பா, மாடு மேய்ச்சு அதுல வர்ற காசுல சம்பாதிச்சு படிச்சிட்டு ஐ.பி.எஸ் ஆபிஸர் ஆனவர். சூரியை விட நூறு மடங்கு வலியை வாழ்க்கையில பார்த்திருக்கார். ‘ மன்னிச்சு விட்டுறுனு’ அப்பா சொன்னார். அப்பா மனசுக்கு சொல்லிட்டார். ஆனா, என்னால மன்னிக்கவே முடியாது. ஏன்னா, அப்பாவுடைய முப்பத்து அஞ்சு சர்வீஸ்ல அப்பாவுக்கு எந்த ஒரு இழுக்கும் இருந்ததில்ல. சூரியை வாழ்க்கை முழுக்க மன்னிக்கவே முடியாது. சூரி கூட நடிச்சு வர்ற வெற்றி தேவையில்லை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.