விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன், ரித்விகா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நாசர் நடித்திருக்கும் திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையில் வெளியானது. மாறுப்பட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் பார்த்துவிட்டு படக்குழுவைப் பாராட்டினார். அதுகுறித்து நடிகர் மணிகண்டனிடம் பேசினேன்.
” ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ்ல இருந்து போன் பண்ணுனாங்க. கமல் சார் பார்க்க விரும்புறதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா போய் பார்த்தோம். இதுக்கு முன்னால் ‘ஜெய்பீம்’ படம் ரிலீஸூக்கு பிறகும் கமல் சார் கூப்பிட்டு பாராட்டினார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் முழு யூனிட்டை கமல் சார் அழைத்து பாராட்டியது எங்க எல்லாருக்கும் சந்தோஷம். ‘எத்தனை நாளுல படத்தை எடுத்து முடிச்சீங்கனு’னார். ‘முப்பத்து அஞ்சு நாளுல முடிச்சிட்டோம்’னு கேட்டவுடனே சந்தோஷப்பட்டார். கமல் சார், பாராட்டுனதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமில்ல. தவிர, சாரோட ‘தூங்கா வனம்’ `விஸ்வரூபம்’ படத்துல கூட்டத்துல நிக்குற ஆளா டப்பிங் ஆர்டிஸ்ட் வேலை பார்த்தவனுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கப்போகுது” என மகிழ்ச்சியாகக் கூறினார் மணிகண்டன். இவரைத் தொடர்ந்து அசோக் செல்வனிடம் பேசினேன்.
” ‘சூது கவ்வும்’ படம் பார்த்துட்டு படத்தோட டீமைக் கூப்பிட்டு பேசுனார் கமல் சார். அப்போ சினிமா எனக்கு புதுசு. பெருசா சார்கிட்ட பேச முடியல. இப்போ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தைப் பார்த்துட்டு கூப்பிட்டு பாராட்டினார். முதல்ல, இந்தப் படத்தோட ஆடியோ லான்ச் அப்போ கமல் சார் வந்திருந்தார். அந்த நேரத்துல, கேரளாவுல ஷூட்டிங்ல இருந்தனால என்னால நிகழ்ச்சில கலந்துக்க முடியல.
Also Read: “சூரியை என் வாழ்க்கை முழுக்க மன்னிக்கவே முடியாது”- விஷ்ணு விஷால்
அது மனசை உருத்திக்கிட்டே இருந்தது. இப்போ பைனலி படம் பார்த்துட்டு சார் கூப்பிட்டு பேசுனது ரொம்ப ஹாப்பி. ரொம்ப நெருக்கமா பேசுனார். அடுத்து என்ன பண்ணுறீங்கனு கேட்டார்.’மன்மதலீலை’னு உங்க படம் பெயர் கொண்ட படத்துல நடிச்சிட்டு இருக்கேன்னு’ சொன்னேன்.
‘அப்படியானு’ சந்தோஷப்பட்டார். எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் கமல் சார். சினிமால ஒரு வாத்தியார் கமல் சார். என்னோட வாத்தியாரை பார்த்ததுல செம ஹாப்பி, இன்ஸ்டாகிராம்ல கூட when the student met the vaathiyaar இப்படிதான் போஸ் போட்டிருந்தேன்’ என சந்தோஷப்பட்டார் அசோக் செல்வன்.