நேபாளத்தில் உள்ள பியூதான் மாவட்டத்தில் புதுமணத் தம்பதியுடன் சென்ற ஜீப் ஒன்று, மலைப்பாங்கான சாலையில் சறுக்கி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மணமக்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். புதுமண தம்பதியையும் அவர்களது உறவினர்களையும் ஏற்றிக் கொண்டு லுங் பகுதியில் இருந்து கௌமுகி கிராமப்புற நகராட்சியின் லிபாங் நோக்கிச் சென்ற போது, ஜீப் சறுக்கி சுமார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்து நேரிட்டது.
இதில் சம்பவ இடத்திலேயெ 6 பேர் உயிரிழந்ததாகவும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு நேபாளத்தில் குளிர்காலத்தில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வழுக்கும் சாலைகளால் அவ்வப்போது இது போன்ற விபத்துகள் நேரிடுவதாக கூறப்படுகிறது.