ராகம மருத்துவ பீட விவகாரம்! ஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாட்டிற்கு கிடைத்த பாராட்டுராகம மருத்துவ பீட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்ட விதத்தை  முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பாராட்டியுள்ளார்.

ராகம மருத்துவ பீட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இதன்போது, தவறு செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வண.உடுவே தம்மாலோக தேரர், பிள்ளைகளின் தவறுகளுக்கு பெற்றோர்கள் நட்டஈடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

எனவே, குழந்தைகள் சரியான முறையில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.