விவாகரத்துக்கு காரணம் இதுதான்… முன்னாள் முதல்வரின் மனைவி புது கண்டுபிடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்த, ஒரு பெண்ணாக நான் உங்களிடம் பேசுகிறேன்.

மும்பை மாநகர சாலைகளில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அவற்றில் உள்ள பள்ளங்களால் பொதுமக்கள் தினமும் எவ்வளவு சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்பதை நானும் அனுபவித்து வருகிறேன்.

மும்பை மாநகரில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதன் காரணமாக 3 சதவீத குடும்பங்களில் விவாகரத்து ஏற்படுகிறது’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

போலி ரேஷன் கார்டுகள்…இந்த மாநிலம்தான் முதலிடம்!

பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வரான பட்னாவிஸின் மனைவியின் இந்த கருத்தை சிவசேனா தலைவரர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ மூன்று சதவீத மும்பைவாசிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் எனக் கூறியுள்ள பெண்ணுக்கு இந்நாளின் சிறந்த லாஜிக் விருது வழங்கப்படுகிறது. மும்பை குடும்பங்கள் இதனைப் படிப்பதைத் தவிர்க்கவும். இது உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு ஊறுவிளைவிக்க கூடும்’ என அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.