வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களுரு-கர்நாடக கல்வி மையங்களில் முஸ்லிம் மாணவியர், ‘பர்தா’ அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரி அம்மாநிலத்தின் பல பகுதிகளில் காங்., போராட்டம் நடத்தியது.
இதற்கு பதிலடியாக பல கல்லுாரிகளில் ஹிந்து மாணவ – மாணவியர் கழுத்தில் காவித் துண்டுடன் வகுப்புக்கு வந்ததால் பரபரப்பு நிலவுகிறது. விதிமுறைகர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில், கடந்த மாதம் ஆறு முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து வகுப்புக்கு வந்தனர்.
அக்கல்லுாரி சீருடை விதிகளின்படி, வளாகம் வரை முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து வர அனுமதி உள்ளது. ஆனால் ஆறு மாணவியர் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்ததால், விதிமுறையை சுட்டிக் காட்டி அவர்களை கல்லுாரி நிர்வாகம் வெளியேற்றியது.இதை எதிர்த்து மாணவியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் உடுப்பியை தொடர்ந்து மேலும் பல நகரங்களில் முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து வரத் துவங்கியுள்ளனர். இதற்கு பதிலடியாக பல கல்லுாரிகளில் ஹிந்து மாணவ – மாணவியர் கழுத்தில் காவித் துண்டுடன் வகுப்புக்கு வந்ததை அடுத்து, இந்த விவகாரம் காங்., – பா.ஜ., தலைவர்கள் இடையே மோதலுக்கு வழி வகுத்துள்ளது.
பரபரப்பு
இதற்கிடையே முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான முஸ்லிம் மாணவியர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.தலிபானிசத்தை அனுமதிக்க முடியாதுகல்வி மையங்களில் மதத்தை புகுத்த அனுமதிக்க முடியாது. சீருடை விதிகளை பின்பற்ற தவறினால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்
. தலிபானிசத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நலின் குமார் கட்டீல், தலைவர், கர்நாடக பா.ஜ.,எதிர்காலம் பாழாகும்கடவுள் சரஸ்வதி பாரபட்சமின்றி அனைவருக்கும் அறிவை வழங்குகிறார். அவர் வேறுபாடு பார்ப்பதில்லை. மாணவியர் கல்வியில் ‘பர்தா’ விவகாரத்தை நுழைப்பதன் வாயிலாக, நம் தேச மகள்களின் எதிர்காலத்தை பாழாக்கப் பார்க்கிறோம்
ராகுல், காங்., – எம்.பி.,
Advertisement