e-Passport: இ-பாஸ்போர்ட் என்றால் என்ன… காத்திருந்த காலம் எல்லாம் மாறிப்போச்சு!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 – 2023ஆம் நிதியாண்டுக்கான இந்திய பட்ஜெட்டை வெளியிட்டார். அவர் பட்ஜெட் உரையில் இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இ-பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு பல வசதிகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் இ-பாஸ்போர்ட் என்றால் என்ன, அதன் பயன்பாடு என்ன, சாதாரண பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக இ-பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும்? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும். அந்த கேள்விகளுக்கான அனைத்து விடைகளையும் இந்த செய்தி மூலம் பகிர விரும்புகிறேன்.

போலி பான் அட்டை – எளிமையாகக் கண்டறிவது எப்படி?

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

இ-பாஸ்போர்ட் சாதாரண பாஸ்போர்ட் போலவே இருந்தாலும், இதில் மின்னணு சிப் பயன்படுத்தப்படுகிறது. இது கடவுச்சீட்டின் அட்டை அல்லது உள் பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு மைக்ரோ சிப் ஆகும். இ-பாஸ்போர்ட்டில் விண்ணப்பதாரர்களின் தகவல்கள் டிஜிட்டல் அடையாள வடிவில் உள்ள இந்த சிப்பில் பாதுகாக்கப்படும் இதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கி இருக்கும். இந்த சிப்பில் உள்ளிடப்பட்ட தகவலை மாற்றவோ, சிப்பை சேதப்படுத்தவோ முயன்றால், சிப் செயலிழந்துவிடும். அதாவது உங்கள் பாஸ்போர்ட் செயலிழந்ததுவிடும்.

e-EPIC download: வாக்காளர் அடையாள அட்டையை மொபைலில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

பயோமெட்ரிக், செயற்கை நுண்ணறிவு, சாட்பாட்கள், ஆட்டோ ரெஸ்பான்ஸ் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் இ-பாஸ்போர்ட்டுக்கு பயன்படுத்தப்படும். கைரேகை மட்டுமின்றி கண் விழி ஸ்கேனும் இ-பாஸ்போர்ட்டில் இருக்கும். ஆதார் அட்டை தயாரிக்கும் போது விரல்கள் மற்றும் கருவிழிகளை ஸ்கேன் செய்வது போல, இந்தத் தகவல்கள் அனைத்தும் கைக்ரோ சிப்பில் சேகரிக்கப்படும்.

இனி காத்திருக்க வேண்டாம்!

குடிவரவு சரிபார்க்கும் இயந்திரம் சரியான நபரை அடையாளம் காணவும், இதற்காக நெடு நேரமாக காத்திருக்கும் சூழலை மாற்றவும் இ-பாஸ்போர்ட் பயன்படுகிறது. நீங்கள் ஒரு சாதாரண பாஸ்போர்ட்டுடன் ஒரு நாட்டிற்குள் நுழையும்போது, உங்கள் நுழைவு குறித்த தகவல் அந்த பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்படும்.

ரேசன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி… எளிய வழிமுறைகள் இங்கே

இ-பாஸ்போர்ட் செயல்பட தொடங்கும் பட்சத்தில், இந்தத் தகவல்கள் அனைத்தும் இ-பாஸ்போர்ட்டில் உள்ள எலக்ட்ரானிக் சிப்பில் சேமிக்கப்படும். இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார், அந்தந்த நாடுகளில் எவ்வளவு காலம் இருந்தார் என்பதை காகித ஆவணங்களின்றி டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும்.

இ-பாஸ்போர்ட்டில் என்ன வசதி?

பொதுவாக வெள்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும்போது, சாதாரண பாஸ்போர்ட்டில் விசா முத்திரை இடப்படும். இந்த பணியை குடிவரவுத் துறை அலுவலர்கள் பல கட்ட சோதனைகளுக்கு பின் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்தே, பயணிகள் வேறு நாடுகளுக்குள் நுழைய முடியும். இதற்காக அதிக நேர விரயம் ஏற்படும் சூழல் நிலவிவந்தது.

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி

இ-பாஸ்போர்ட் செயல்பாட்டுக்கு வந்தால், பயணிகளின் பயண விவரங்கள் முதற்கொண்டு அனைத்து விவரங்களும் சிப்பில் பதியப்படும். எனவே, ஸ்கேனர் உதவியுடன் பயணிகளின் இ-பாஸ்போர்ட் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் வருகைப் சிப்பில் பதிவு செய்யப்படும். பிற நாடுகளுக்கு புறப்படுவதற்கு முன்னரும், அங்கு சென்ற பின்னரும் இ-பாஸ்போர்ட் கையில் இருந்தால் பயணம் சுமையாக இல்லாமல் சுலபமாக அமையும் என்பதே எதார்த்தம்.

இ-விசா கிடைக்குமா?

சில நாடுகளில் இந்த வசதி அமலில் உள்ளது. நீங்கள் வீட்டில் அமர்ந்து இ-பாஸ்போர்ட் உதவியுடன் இ-விசா எடுக்கலாம். ஒரு நாடு இ-விசாவை வழங்கும் போது, அந்தத் தகவல்கள் அனைத்தும் பாஸ்போர்ட்டில் உள்ள மின்னணு சிப்பில் ஏற்றப்படுகிறது. இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர் Emigration வாயிலை அடைந்ததும், அங்கு நிறுவப்பட்டுள்ள இயந்திரம் மற்றும் கேமரா பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பிறகு கதவுகள் திறக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பயணத்திலிருந்து அனைத்து நடவடிக்கைகளும் சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன.

Pan card download: பான் கார்டு தொலைந்தால், மீண்டும் பெறுவது எப்படி?

நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸிடம், electronic contactless inlays மற்றும் இ-பாஸ்போர்ட்டுக்கான இயங்குதள உரிமத்தை வாங்க ஒன்றிய அரசு ஒப்பந்தப்புள்ளி கொடுத்துள்ளது. நாசிக்கின் இந்தியா செக்யூரிட்டி பிரஸ் கொள்முதல் செயல்முறையை முடித்த பின்னரே இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என்று நினைவுகூரத்தக்கது.

ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில், இ-பாஸ்போர்ட் மட்டுமே நடைமுறையில் உள்ளது. மேலும், இந்தியாவில் இ-பாஸ்போர்ட் பாதுகாப்பு குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இ-பாஸ்போர்டில் உள்ள மைக்ரோ சிப்பை வேறு கருவிகள் ஏதும் தொடர்பு கொள்ள முயற்சித்தால், அது தானாக தொடர்பை முறித்துவிடும். அதுமட்டுமில்லாமல், அதை சேதப்படுத்தினால், இ-பாஸ்போர்ட் செயலிழந்துவிடும். என்றாலும் கூட, தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கும் நாம், பாதுகாப்பு வளையத்தை விரிவுபடுத்துவது மிகவும் அவசியம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இ-பாஸ்போர்ட் Vs சாதாரண பாஸ்போர்ட்

சாதாரண பாஸ்போர்ட்டைப் போலவே, இ-பாஸ்போர்ட்டில் 30 அல்லது 60 பக்கங்கள் இருக்கும். லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில், இ-பாஸ்போர்ட்டுக்கென தனி வரிசை உள்ளது. இந்தியாவில் யாரிடமாவது இ-பாஸ்போர்ட் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தால், அதற்கு ‘ஆம்’ என்றே பதில் இருக்கும்.

வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சியால் 2008 ஆம் ஆண்டில் தேசியத் தகவல் மையம் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மேற்கொண்டது. இதன் மூலம் தூதரக அலுவலர்களுக்கு சுமார் 20 ஆயிரம் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில், சாதாரண குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட்டை உருவாக்கிச் செயல்படுத்தும் பொறுப்பு தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

kisan credit card: கிசான் கிரெடிட் கார்டு உடனே பெறுவது எப்படி… 4% மலிவு வட்டியில் கடன்!

சாதாரன கடவுச்சீட்டுக்கு பதிவு செய்வது போன்றே, இ-பாஸ்போர்ட்டுக்கும் பதிவு செய்ய முடியும். புதிதாக எந்த நடைமுறையும் கிடையாது. ஆதார் ஆவணங்களில் உள்ள தரவுகள் அனைத்தும் நேரடியாக செல்லும்போது சரிபார்க்கப்படும். அனைத்து தரவுகளும் கைக்ரோ சிப்பில் பதிவு செய்யப்படும். சாதாரண பாஸ்போர்ட் மக்களுக்கு 15 முதல் 30 நாள்களுக்குள் கிடைக்கும். இ-பாஸ்போர்ட் முறை நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும்போது, இதே கால அளவில் இ-பாஸ்போர்ட் பதிவு செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும்.

இந்தியாவில் மொபைல் எண்கள் 6, 7, 8, 9 இல் தொடங்குவதற்கு காரணம் என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.