Virtual Avatar உலகத்தை பாலியல் துன்புறுத்தல் இல்லாததாக மாற்றிய Meta

புதுடெல்லி: Meta தனது மெய்நிகர் அவதாரங்கள் தொடர்பான அம்சத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்த அம்சம் உங்கள் அவதாரத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையில் சுமார் நான்கு அடி தூரம் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது தேவையற்ற தொடர்புகளைத் தவிர்க்க உதவும்.

மெய்நிகர் அவதாரங்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மக்களிடமிருந்து Metaverseக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதை அடுத்து நிறுவனம் இந்த மாற்றத்தை செய்திருக்கிறது. 

நினா ஜேன் படேல் என்பவர் மெய்நிகர் உலகில் (virtual World) நுழைந்த உடனேயே ஃபேஸ்புக்கின் மெட்டாவேர்ஸில் “கிட்டத்தட்ட கூட்டு பாலியன் வன்புணர்வு செய்யப்பட்டதாக” என்று ஓரிரு நாட்களுக்கு முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | பேஸ்புக்கின் மெட்டாவேர்ஸில் கூட்டு பாலியல் துன்புறுத்தல் சாத்தியமா?

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை அடைந்துவிட்டதால் வேறொருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் நுழைய முயற்சித்தால், அவதாரத்தின் முன்னோக்கி இயக்கத்தை அமைப்பு இயல்பாகவே நிறுத்தும் வகையில் இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் ரியாலிட்டி உலகத்தை பாலியல் துன்புறுத்தல் இல்லாததாக மாற்ற, சமூக வலைப்பின்னல் Meta, Horizon Worlds மற்றும் Horizon Venues விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) அமைப்புகளுக்கான ‘தனிப்பட்ட எல்லை’ (personal boundary) அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.

அது குறித்து பேசிய ஹொரைசன் துணைத் தலைவர் விவேக் ஷர்மா “இது மக்களின் அனுபவங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொள்வதன் மூலம் தொடர்ந்து இந்த அம்சத்தை மேம்படுத்துவோம்” என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை அடைந்துவிட்டதால் வேறொருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் நுழைய முயற்சித்தால், அவதாரத்தின் முன்னோக்கி இயக்கத்தை அமைப்பு இயல்பாகவே நிறுத்தும்.

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், ஷர்மா இது குறித்து பதிவிட்டார்.

அதில்,  “நீங்கள் அதை உணர மாட்டீர்கள் — ஹாப்டிக் பின்னூட்டம் இல்லை. இது ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. ஒரு அவதாரத்தின் கைகள் அத்துமீறி நுழைந்தால் உடனே அவை மறைந்துவிடும். ஒருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் வேறு அவதார் நுழைய முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

VR போன்ற ஒப்பீட்டளவில் புதிய ஊடகத்திற்கு, முக்கியமான நடத்தை விதிமுறைகளை அமைப்பதிலும் மெட்டாவர்ஸ் நிறுவத்தின் இந்த முடிவு உதவக்கூடும்.

“எதிர்காலத்தில், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் UI மாற்றங்களைச் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்வோம், மக்கள் தங்கள் தனிப்பட்ட எல்லையின் அளவைத் தனிப்பயனாக்க அனுமதிப்பது போன்றது” என்று ஷர்மா தெரிவித்தார்.

ALSO READ | JIO vs Airtel: 5 G நெட்வொர்க்கில் எது பெஸ்ட்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.