ஆழ்துளை கிணற்றில் சிக்கிய மொராக்கோ சிறுவன் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் எவ்வளவோ நவீன வசதிகள் பெருகினாலும், உலகமே இயந்திரமயமானாலும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கி நிகழும் உயிரிழப்புகள், குறிப்பாக, சிறுவர்களின் உயிரிழப்புகள் தொடர் கடையாகி வருகின்றன. அந்த வகையில்,
மொராக்கோ
நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடானா மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே ஒன்றரை அடி விட்டம், 100 அடி ஆழம் கொண்ட
ஆழ்துளை கிணறு
அமைக்கப்பட்டிருந்தது. இந்த கிணற்றில் கடந்த செவ்வாய்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, 5 வயது சிறுவன் சிக்கிக் கொண்டான்.

சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் என சிறுவன் அழுததாக அச்சுறுவனின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

ஏலத்திற்கு வந்த கணவன் – வாங்க சம்மதம் தெரிவித்த 12 பெண்கள்!

சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. பலரும் சிறுவன் மீண்டு வர பிரார்த்தனை மேற்கொண்டனர். எனினும், பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டது. ஆனாலும், மீட்புப் பணிகள் கவனமாக மேற்கொள்ளப்பட்டன. எப்படியும் சிறுவனை மீட்டுவிட வேண்டும் என்று பணியாளர்கள் படாத பாடு பட்டனர்.

மீட்பு பணியாளர்கள் இரவுபகல் பாராமால் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக நடந்த மீட்பு பணிகள் தோல்வியில் முடிந்ததாகவும், மீட்பு பணியின் முடிவில் சிறுவனை வெளியே கொண்டு வந்த போதே அவன் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சிறுவன் எப்படியும் மீட்கப்பட்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் உலகம் முழுவதும் காத்திருந்த மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சிறுவனின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டின் அரசர் 6ஆம் முகமது, தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு சிறுவனின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.