இந்திய வம்சாவளிக்கு மரண தண்டனை | Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷோர் குமார் ரகுவன்,41,’ஹெராயின்’ போதைப் பொருளை ஒரு பையில் வைத்து, புங் ஆ கியாங் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம், கிஷோருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. புங் ஆ கியாங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராமிற்கு அதிகமான போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை வழங்கப்படும். கிஷோர் 36 கிராம் ஹெராயின் வைத்திருந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ‘பையில் போதை மருந்து இருந்தது தெரியாது; அதை ‘கல்’ என கூறி ஒருவர் புங்கிடம் வழங்குமாறு கூறினார்’ என கிஷோர் தரப்பில் வாதாடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, போதைப் பொருள் கடத்தலில், கிஷோர் இடைத்தரகராக செயல்பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக கூறி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.