இஸ்தான்புல்:துருக்கியின் இஸ்தான்புல் சிறையில் நடந்த தீ விபத்தில் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியின் இஸ்தான்புல் சிறையில், நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.சிறை பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்கிடையே தீயின் புகையால் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிறையில் தீ அணைக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாக, அந்நாட்டு சட்ட அமைச்சர் பெகிர் போஸ்டாக் சமூக வலைதளத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.துருக்கியில் அரசின் தடுப்புக் காவல் விதிகளுக்கு எதிராக, சிறையில் படுக்கை மற்றும் போர்வைகளை கைதிகள் எரித்த சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. தற்போது தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
இஸ்தான்புல்:துருக்கியின் இஸ்தான்புல் சிறையில் நடந்த தீ விபத்தில் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.