5 மாநில தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கிச்சாவின் தேராய் பகுதியில் 1,000 விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்து, உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு 4 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.
“4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வோம், சிலிண்டர் விலையை ரூ. 500க்கும் குறைவாக வழங்குவது, நியாய் திட்டத்தின் மூலம் 5 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்படும் மற்றும் வீட்டு வாசலிலேயே மருத்துவ வசதிகள் வழங்கப்படும்.” என்பன அந்த திட்டங்கள்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சி மன்னராட்சி முறையை போன்றது எம கடுமையாக விமர்சனம் செய்தார். “ராஜாவாக உள்ள ஒருவர் கூலித் தொழிலாளியிடம் பேசவோ, அவருடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள், அதுபோலத் தான் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உள்ளது” எனக் கடுமையாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி விளக்கு ஏற்றி வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: உத்தரகாண்ட் தேர்தல்: பா.ஜ.க-வில் இணைந்தார் பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத்!