ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் “உற்பத்தி” செய்யப்படுகின்றன. இப்படியாக நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும் கழிவுகளில் ஒரு சிறிய பங்களிப்பு தான் – சிகரெட் துண்டுகள்.
இந்நிலைபாட்டில் “இதே சிகரெட் கழிவுகள்” சமாச்சாரத்தின் கீழ், ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் செயல் இணையத்தில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது; வைரல் ஆகி வருகிறது.
சிகெரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள மெஷினில் காகங்கள் எடுத்து வந்து போடும். ஒவ்வொரு சிகரெட் துண்டுக்கும், சில நிலநடுக்கடலைகள் அவற்றுக்கு பரிசாக வழங்கப்படும்.
குறைந்த விலையில் தெருக்களை தூய்மைப்படுத்த கார்விட் க்ளீனிங் என்ற நிறுவனம் இம்முயற்சியை எடுத்துள்ளது.
அதிகரித்துக் கொண்டே போகும் சிகரெட் கழிவுகள் சார்ந்த சிக்கலை சமாளிப்பதற்கும், தெருக்களில் வீசப்பட்ட சிகரெட் துண்டுகளை சேகரிப்பதற்கும் இந்த ஸ்வீடிஷ் நிறுவனம் ஒரு வழியை கண்டறிந்து உள்ளது.
இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் செயல் பெரிய அளவிலான கவனத்தை பெற காரணம், நிறுவனம் நிர்ணயித்த இலக்கால் அல்ல, அதை அடைய அவர்கள் முயற்சிக்கும் விதத்தால்!
இந்த பயிற்சியானது ஒரு படிப்படியான செயல்முறையாக இருக்கும், பின்னர் முழுமையாக பயிற்சி பெற்ற சில காகங்கள், ஸ்வீடன் நாட்டின் சோடெர்டால்ஜி நகரில் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் “பணியை” தொடங்கும்.