பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை, சிகிச்சை பலனின்றி பாடகி லதா மங்கேஷ்வர் உயிரிழந்தார். அவருக்கு வயது 92.
மும்பையில் உள்ள சிவாஜி நகரில், பாடகி லதா மங்கேஷ்வரின் உடல் அரசு முழு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லதா மங்கேஷ்வரின் மறைவுக்கு உலக தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் – இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு!
அந்த வகையில் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கான்
இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
லதா மங்கேஷ்கரின் மறைவால், உலகம் அறிந்த சிறந்த பாடகிகர்களில் ஒருவரை துணைக் கண்டம் இழந்து விட்டது. இவரது பாடல்களைக் கேட்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என தெரிவித்து உள்ளார்.