சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

மொகடிஷு:
சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான கிஸ்மாயோ நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் கிளர்ச்சியாளர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியது. கண்ணி வெடித்ததால் வேன் முற்றிலும் சிதைந்தது. 
இதில், வேனில் இருந்த 5 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என தெரிகிறது.
கண்ணிவெடி வெடித்த சமயத்தில், அரசுப் படைகள் அல்-ஷபாப் போராளிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. கிஸ்மாயோவின் வடக்கு பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது இந்த சண்டை ஏற்பட்டது. இதில், பாதுகாப்பு படை தரப்பில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்ததாகவும், பல போராளிகள் இறந்ததாகவும் ராணுவ கமாண்டர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.