நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
இருவரும் பிரிவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் ஆனா இவர்கள் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்த்திவிட்டு திடீரென பிரிவதாக அறிவித்தது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனால் மனமுடைந்த
ரஜினி
யாரிடமும் பேசாது தனிமையில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக இவரது மனைவி
லதா
தன் மகள் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அப்பாவின் கோபத்தை தணிக்க நீங்கள் இருவரும் ஒன்றுசேர வேண்டும் என கேட்டுள்ளார் லதா. எனவே ஐஸ்வர்யாவும் மனம்மாறி தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ரஜினிக்கு வழங்கவிருக்கும் அரசியல் பதவி? இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு..!
தனுஷ் வீட்டிலும் அவரது அப்பா கஸ்தூரி ராஜா விடாப்பிடியாக தனுஷை ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இருக்கிறார். இருவீட்டாரும் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் நாங்கள் பிரிந்து வாழப்போகிறோம் என தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்தார்களே தவிர விவாகரத்து பெறப்போவதாக தெரிவிக்கவில்லை.
அதனால் இவ்விருவரின் மனமும் மாறினால் சேர்ந்து வாழ வாய்ப்பிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் ஒன்று சேர்த்து பேச ரஜினி திட்டமிட்டிருக்கிறாராம்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே கூடிய விரைவில் ரஜினிக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என அவரது ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் சார் தான் முதல் வாய்ப்பு கொடுத்தார் – புகழ் பெருமிதம்!