பதவியை காப்பாற்றும் முயற்சி; புதிய அதிகாரிகளை நியமிக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் இருந்த போது, பிரதமா் இல்லத்தின் விதிமீறல்கள் குறித்த சர்ச்சைகள் வெளியான நிலையில், அரசின் உயா் அதிகாரிகள் 4 போ் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனா். இது, பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது தொடா்பாக அரசுத் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

அதில், கொரோனா பரவலை ( Corona Virus) கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை கடை பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வந்த சூழலில், மதுபான விருந்துகளில் சிலா் நடந்து கொண்ட விதத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து, அந்த சம்பவங்களுக்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.

மேலும், பிரதமா் போரிஸ் ஜான்சனின் (UK PM Boris Johnson) தலைமை குறித்து கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில், உயா் அதிகாரிகள் 4 போ் ராஜினாமா செய்திருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

ALSO READ | எலோன் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா!

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது பதவிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் முன்னாள் பிரெக்ஸிட் அமைச்சர் ஸ்டீவ் பார்க்லேவை புதிய தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார்.

முக்கிய ஊழியர்களின் சில ராஜினாமாக்களுக்குப் பிறகு, ஜான்சன் தனது பிரதமர் பதவியைக் காப்பாற்ற இன்னும் பல மாற்றங்களைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது கேபினட் அலுவலக அமைச்சராக இருக்கும் பார்க்லே, அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் முன்னாள் செய்தி தொகுப்பாளர் குடோ ஹாரி, வயது 55, புதிய தகவல் தொடர்புத் தலைவராக இருப்பார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அரசின் செயல்பாடுகள் குறித்த பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட போது, ​​ஊரடங்கு மீறல் கூட்டங்கள் நடத்தப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.