பிப். 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கம்!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசு விளக்கம் அளித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

மேற்கு ஐரோப்பியா நாடான ஆஸ்திரியாவில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரியாவில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கடந்த 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு? – தமிழக அரசு முடிவு?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும்
ஆஸ்திரியா
அரசு கெடு விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் விகிதம் குறையும் பட்சத்தில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்படலாம் என கூறப்படுகிறது. ஆஸ்திரியாவில், 76 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.