பூவே உனக்காக சீரியலை விட்டு விலகிய கதாநாயகி

ஹிட் தொடர்களில் ஒன்று 'பூவே உனக்காக'. இதில் அஜய் ரத்தினம், விக்னேஷ், தேவி ப்ரியா உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கதையின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் இந்த தொடரில் நடிகை சாயா சிங் சமீபத்தில் இணைந்து நடித்து வருகிறார். வில்லியாக அவர் காட்டும் ஆக்ஷன்கள் டிஆர்பிக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். தற்போது இந்த தொடர் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தொடரின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி சீரியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பூவே உனக்காக தொடரின் மூலம் மிக குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட ராதிகா ப்ரீத்தி தனது சமூகவலைதளத்தில் 'பூவே உனக்காக தொடரிலிருந்து விலகுவதை கனத்த இதயத்துடன் உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், டிவிக்கு நன்றி. என் வாழ்க்கையின் அனைத்து படிகளிலும் எனக்கு சப்போர்ட்டாக வரும் ரசிகர்களுக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார். இது தொடருக்கு பின்னடவை தரும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும், பூவரசி கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிக்கப்போகும் நடிகை யார் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.