லதா மங்கேஷ்கரின் இழப்பு எனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளது : இளையராஜா உருக்கம்… வீடியோ

இந்திய திரைப்பட இசை உலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவு தனக்கு மிகவும் மனவேதனை அளித்திருப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் ‘ஆராரோ ஆராரோ’ என்று பிரபு நடித்த ஆனந்த் படத்திலும், ‘வலையோசை கலகலகலவென’ என்று கமல் நடித்த சத்யா படத்திற்க்காகவும் பின்னணி பாடியவர் லதா மங்கேஷ்கர்.

கொரோனா காரணமாக ஜனவரி மாதம் 8 ம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது.

இந்நிலையில் மருத்துவமனையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது, லதா மங்கேஷ்கரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மறைவு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இசைஞானி இளையராஜா “லதா மங்கேஷ்கரின் இழப்பு எனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.