பொதுவாக இந்தியாவினை பொறுத்தவரையில் முதலீட்டு திட்டங்கள் பல ஆயிரம் இருந்தாலும், வருமானம் குறைவாக இருந்தாலும், அதிக நபர்களை ஈர்க்க கூடியது வங்கி டெபாசிட்கள் தான்.
சந்தை அபாயம் இல்லாத, நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய சவால்.. சமாளிக்க முடியுமா..!!
இதில் கூடுதலாக வரிச்சலுகையும் கிடைக்குமென்றால், இன்னும் சிறந்தொரு வாய்ப்பு தானே.
யாருக்கு ஏற்றது?
இது குறிப்பாக சந்தையில் புதியதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், மூத்த குடி மக்கள் என அனைவருக்கும் ஏற்ற திட்டமாக இந்த வங்கி பிக்சட் டெபாசிட்கள் உள்ளன.
அந்த வகையில் 5 வகையான பிக்சட் டெபாசிட்களை இன்று நாம் காணவிருக்கிறோம். இதற்கு எவ்வளவு வட்டி விகிதம் இதற்கு வரி சலுகை உண்டா வாருங்கள் பார்க்கலாம்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.40%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.90%
இந்த வட்டி விகிதமானது செப்டம்பர் 1, 2021ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
பஞ்சாப் சிந்த் வங்கி
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.30%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.80%
இந்த வட்டி விகிதமானது செப்டம்பர் 16, 2021ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
எஸ்பிஐ
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.30%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.80%
இந்த வட்டி விகிதமானது ஜனவரி 15, 2022ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
பேங்க் ஆப் பரோடா
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.25%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.75%
இந்த வட்டி விகிதமானது நவம்பர் 16, 2020ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
கனரா வங்கி
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.25%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் – வருடத்திற்கு 5.75%
இந்த வட்டி விகிதமானது ஜனவரி 17, 2022ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
வரிச் சலுகை + வட்டி
மேற்கண்ட இந்த 5 பிக்சட் திட்டங்களுக்கும் வரிச்சலுகையும் உண்டு. அதிக வட்டி விகிதத்துடன், வரிச்சலுகையும் கிடைப்பது முதலீட்டாளார்களுக்கு கூடுதல் லாபமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டமாக பார்க்கப்படுகிறது.
five best tax saving deposit schemes in 2022: check details
five best tax saving deposit schemes in 2022: check details/வரிச் சலுகையுடன் பாதுகாப்பான வருமானம்.. 5 சிறந்த திட்டங்கள்.. என்னென்ன தெரிஞ்சுக்கோங்க..!