ஸ்டார்ட் அப் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. சம்பள உயர்வுடன் கூடிய சலுகைகள்..!

கடந்த சில காலாண்டுகளாகவே வேலை வாய்ப்பு சந்தையில் மாபெரும் மாற்றங்கள் வந்துள்ளன. ஏனெனில் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்பு வளர்ச்சி கண்டு வந்துள்ளன.

வேலை வாய்ப்பு சந்தையும் இதனால் மீண்டு வந்து கொண்டுள்ளது. சில துறைகளில் முந்தைய காலாண்டுகளில் இரு முறை சம்பள உயர்வு, பதவி உயர்வு என இருந்தது.

இதற்கிடையில் வரவிருக்கும் அப்ரைசலில் ஸ்டார்ட அப் ஊழியர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

50 வயதில் ரூ.11 கோடி சாத்தியமா.. எதில் முதலீடு..எவ்வளவு செய்யலாம்..!

ஸ்டார்ட் அப்களில் வலுவான வளர்ச்சி

ஸ்டார்ட் அப்களில் வலுவான வளர்ச்சி

இது குறித்து வெளியான அறிக்கையில் இந்திய ஸ்டார்ட் அப்கள் மிகப் பெரிய சம்பள உயர்வினை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரலாறு காணாத அளவு முதலீடு, முக்கியத் துறைகளில் மிகப்பெரிய அளவில் சம்பள உயர்வினை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் வலுவான வளர்ச்சி விகிதம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறமைக்கான பற்றாக்குறை

திறமைக்கான பற்றாக்குறை

குறிப்பாக ஐடி துறையில் திறமைக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது. இது இந்த அளவுக்கு வலுவான வளர்ச்சி காண துணைபுரியலாம். குறிப்பாக ஐடி துறையில் நிலவி வரும் தேவைக்கு மத்தியில், திறன்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு வேலை வாய்ப்பு துறையில் ஊக்கத்தினை அளிக்கலாம்.

சராசரி ஏற்றம்
 

சராசரி ஏற்றம்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சராசரி சம்பள உயர்வுகள் 12 – 15% இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் 15 – 25% அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. குறிப்பாக அதிக டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்கள் இதில் இன்னும் அதிக பலன் பெறலாம்.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

டெக் நிறுவனங்களும் இன்றைய காலகட்டத்தில் பெரியளவில் ஊதிய உயர்வினை பெறலாம். இதில் சராசரி 12 – 15% அதிகரிப்பினை பெறலாம். இது கடந்த 2015 – 16ம் ஆண்டிலிருந்து இந்த முறை சம்பள உயர்வு மிக அதிகமாக இருக்கலாம். ஏனெனில் அந்த காலகட்டத்தினை விட அட்ரிஷன் விகிதம் அதிகமாக இருக்கலாம். இதன் காரணமாக திறன் மிகு ஊழியர்கள் 75% வரை உயர்வினை பெறலாம் என ஒரு தரப்பு கூறுகின்றது.

சலுகைகள்

சலுகைகள்

மேலும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள போனஸ், தக்கவைப்பு போனஸ், செயல்திறன் அடிப்படையிலான சலுகையினையும் கொடுக்கலாம்.

இதற்கிடையில் கடந்த ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் அளவிலான நிதியினை திரட்டி வந்தன. இது இந்த ஆண்டும் இந்த போக்கானது தொடர்ந்து வருகின்றது. இது மேற்கோண்டு வணிக விரிவாக்கத்திற்கு பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian start ups may give their biggest salary hikes in 4-5 years

Indian start ups may give their biggest salary hikes in 4-5 years/ஸ்டார்ட் அப் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. சம்பள உயர்வுடன் கூடிய சலுகைகள்..!

Story first published: Sunday, February 6, 2022, 12:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.