ஆஸ்திரேலியாவில் வரும் 21-ம் தேதி முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மெல்போர்ன்,
கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது தொற்று பரவலாக குறைந்து வருவதால், வரும் 21-ம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும், வருகிற  வரும் 21-ம் தேதி முதல் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.