கனேடிய பெண்ணின் கார் சீட்டில் இருந்த மர்ம காலடித் தடங்கள்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை


பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண், தனது கார் சீட்டில் சேறு படிந்த காலடித்தடங்கள் இருப்பதைக் கவனித்துள்ளார்.

Bethany Coker என்ற அந்த பெண், யாரோ தனது கார் கதவைத் திறந்து இரவில் அங்கு தங்கியிருக்கிறார்கள் என்று எண்ணி, கார் சீட்டை சுத்தம் செய்திருக்கிறார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, தனது கார் கண்ணாடியில் யாரோ மூச்சு விடுவதால் ஆவி படர்ந்திருப்பதைக் கவனித்த Bethany காரை சோதிக்க, காரின் பின் சீட் வழியாக, காரின் பின்பகுதியில் யாரோ மறைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு அவர் தகவலளிக்க, பொலிசார் வந்து கார் பின் பக்க கதவைத் தூக்க, சுத்தமாக உடையே அணியாத ஒருவர் வெளியே வந்திருக்கிறார்.

மூன்று நாட்களாக அந்த நபர் தன் காருக்குள் இருப்பது தெரியாமலே பயணம் செய்தது தெரிய வரவே, அதிர்ச்சியடைந்துள்ளார் அந்த பெண்.

அந்த நபர் காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் ஒருவர் என்று கூறியுள்ள Bethany, அவர் தற்போது மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.