காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் <!– காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நேரடித் தேர்தல் பரப்புரையைத் தவிர்த்து, காணொலி வாயிலாக மக்களை சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், திமுக-வினர் புதிய வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி, அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மாவட்டம் வாரியாக நடைபெற உள்ள காணொலி கூட்டங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை, வீடு வீடாகச் சென்று விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.