காரில் தூங்கிக்கொண்டிருந்த நபர்: காரை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி


ஒன்ராறியோவில் தனது காரின் ஓட்டுநர் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை பொலிசார் எழுப்பி விசாரித்தபோது காருக்குள் அவர் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஒன்ராறியோவிலுள்ள Sault Ste. Marie நகரில், சாலையோரம் தனது காரை நிறுத்தி தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை எழுப்பிய பொலிசார், அவரிடம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, அவருக்கு அருகிலுள்ள இருக்கையில் போதைப்பொருள் பொட்டலம் ஒன்று இருப்பதை கவனித்துள்ளனர்.
 

அந்த நபரது பெயர் Aaron Gridzak (39) என விசாரணையில் தெரியவந்தது.

பொலிசார் அவரது காரை சோதனையிடும்போது, காருக்குள் கொக்கைன் என்னும் போதைப்பொருளும், அதை அளந்து விற்பனை செய்வதற்கான தராசும், பொட்டலமிட உதவும் பொருட்களும், கூடவே 3,370 டொலர்கள் கனேடிய கரன்சியும் இருந்துள்ளது.

ஆகவே, போதைப்பொருள் கடத்த முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரிலிருந்த போதைப்பொருளின் மதிப்பு 4,395 கனேடிய டொலர்களாகும்.

அவர், ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.