சீருடை குறித்த அரசின் உத்தரவைப் பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியரை அனுமதிக்கப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் கருத்தைச் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, தனி மனித உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலேயே சீருடை குறித்த அரசின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட்டுப் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டார்.