டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. .

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துனை வேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் (Santishree Dhulipudi Pandit) நியமிக்கப்பட்டுள்ளார்.

சாந்திஸ்ரீ பண்டிட் இதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வந்தார். அவரை தற்போது, டெல்லி ஜேஎன்யுவுக்கு துணைவேந்தராக மத்திய கல்வித்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

தற்து  59 வயதான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவி. சாந்திஸ்ரீ பண்டிட்,  இவர் முதன்முதலாக 1988ல் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு 1993ல் புனே பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.  மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளையும் வகித்துள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங் களுக்கான பார்வையாளர்களைப் பரிந்துரைக்கும் உறுப்பினராகவும் முக்கிய பொறுப்புகளில் சாந்திஸ்ரீ பங்கேற்றுள்ளார். இவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகளில் (International Relations) ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சாந்திஸ்ரீ பண்டிட் பேராசிரியராக இருந்த காலங்களில் 29 பேருக்கு பிஎச்டி பட்டம் பெற வழிகாட்டி பேராசிரியராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.