நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கழித்து தமிழக அரசிற்கு ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 9:55 மணிக்கு டெல்லிக்கு புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக குடியரசாக ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே தமிழக அரசின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் வரும் 8ஆம் தேதி மீண்டும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதால், ஆர் என் ரவியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.