நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை ஒளிபரப்பு: லண்டனில் ஏழு பேர் கைது


ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதை சமைத்து விருந்தினர்களுக்குக் கொடுத்த ஒருவரது முன்மாதிரியைப் பின்பற்றி, நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்த ஒரு கூட்டத்தைச் சேர்ந்த ஏழு பேர் லண்டனில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானைச் சேர்ந்த Mao Sugiyama (23) என்பவர் தனது ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அதை சமைத்து பரிமாற இருப்பதாக விளம்பரம் செய்தார்.

அதற்காக 800 பவுண்டுகள் கட்டணமும் நிர்ணயித்திருந்தார் அவர்.

அவரது விளம்பரத்தைக் கண்ட சுமார் 70 பேர் அந்த விருந்து நிகழ்ச்சிக்காக டோக்கியோவில் திரண்டார்கள். ஆனால், ஐந்து பேர் மட்டுமே அவரது ஆணுறுப்பை சாப்பிட்டார்கள். Sugiyama தன் கைப்பட தன் ஆணுறுப்பை சமைத்து விருந்தினர்களுக்கு வழங்கினார்.

ஆனால், பின்னர் பொலிசார் அவரை கைது செய்துவிட்டார்கள்.

தற்போது Sugiyamaவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஒரு கூட்டம் லண்டனில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில், நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளது.

அந்த அறுவை சிகிச்சையை நேரலையில் பார்க்க ஒரு கூட்டம் பணம் கட்டியிருக்கிறது.

சம்பவ இடத்திலிருந்த மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.