பதவி ஏற்ற ஒரே வாரத்தில் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

தென் அமெரிக்கான நாடுகளில் ஒன்றான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (63) கடந்த 1 ஆம் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி மற்றும் மகள் 2016 இல் புகார் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை பின்டோ திட்டவட்டாக மறுத்து வந்தார்.

இதனிடையே, நாட்டின் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக
பெரு
நாட்டு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ திடீரென அறிவித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்’ என்று அவர் உருக்கமாக கூறியதாக அந்நாட்டு வானொலி அறிவித்துள்ளது.

பிப். 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? – பிரதமர் திடீர் விளக்கம்!

அதேசமயம், தான் எந்த துஷ்பிரயோகமுமம் செய்யவில்லை என்றும், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் மீது அவர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி ஏற்ற ஒரே வாரத்திற்குள் பிரதமர் தமது ராஜினாமா செய்திருப்பது பெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.