பல நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி..எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

நடிகர்
தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக
ரஜினி
வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பதாக தகவல்கள் வந்தன.மேலும் எப்போதாவது தனது நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே ரஜினி பேசிவருவதாகவும் தகவல்கள் உலா வந்தன. ரஜினியின் இந்த நிலையை மாற்ற
லதா
தன் மகள் ஐஸ்வர்யாவிடம் நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் தான் அப்பாவின் கோபம் குறையும் என்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

இதன் காரணமாக ஐஸ்வர்யாவும் ரஜினியின் கோபத்தை போக்க மீண்டும் தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேர இருப்பதாக பலர் சமூகத்தளங்களில் பேசிவருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த விஷயத்தால் ரஜினியின் அடுத்த படமும் பாதிக்கப்பட்டுள்ளதாம். சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் ரஜினி தன் சினிமா வாழ்க்கையில் தற்போது கவனம் செலுத்தவில்லையாம்.

உங்களையெல்லாம் நம்புனா என்னையே ஏமாத்திருவீங்க :நடிகர் விஜய்..பீஸ்ட் ப்ரோமோவில் தளபதி..!

எனவே இதனால் ரஜினியின் அடுத்த படம் தாமதம் அடைவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே ரஜினி தற்போது எப்படி இருக்கிறார் என்ற கவலை அவர்களது ரசிகர்களிடம் வெகுவாக உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவரது இல்லத்திருமண விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துள்ளார் அன்புசெழியன். அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து தற்போது ரஜினி பல நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். சென்னையில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ரஜினி வந்துள்ளார்.அவருடன் மனைவி லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா உடன் இருந்தனர்.

ஆனால்
ஐஸ்வர்யா
ரஜினியுடன் வரவில்லை. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வரவில்லை என ரசிகர்கள் சிலர் கருதுகின்றனர். இருப்பினும் அவர் வராததற்கு பல காரணங்கள் இருக்குமென்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்போது பல நாட்கள் கழித்து ரஜினியை பொது இடங்களில் பார்த்த அவரது ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா வாரியாரின் லேட்டஸ்ட் வீடியோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.