Bharathi Kannamma Serial Update In Tamil : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடிக்கடி கேரக்டர் மாற்றம் வருவது ரசிகர்ளுக்கு சீரியலுக்குமான ஒருவித கனக்ட் இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில், முதலில் பாரதியின் தம்பி அகிலாக நடித்து வந்த அகிலன் விலகினார். அதனைத் தொடர்ந்து கண்ணம்மா என்ற மெயின் ரோலில் நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்ற வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் நடித்து அதன்பிறகு திருந்தி கண்ணம்மாவின் நல்ல தங்கை என்று பெயரெடுத்த அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த கண்மணி மனோகரன் சீரியலை விட்டு விலகினார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும், விரைவில் வேறொரு நிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்கிறேன் என்றும் கண்மணி கூறியிருந்தார்.
இதனால் அடுத்து அஞ்சலி கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது அந்த கேரக்டரில் நடிக்க நடிகை அருள்ஜோதி ஒப்பந்தமாகியுள்ளார். கண்மணி வில்லியாக இருந்தபோதும், நல்லவராக திருந்தி வாழ்ந்தபோதும், ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். ஆனால் இவர் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் புதிதாக வந்துள்ள அருள்ஜோதி கண்மணி இடத்தை நிறப்புவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி, ஜீ தமிழின், சூப்பர் குயின் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், அதே டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ “