பிப். 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? – பிரதமர் திடீர் விளக்கம்!

வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதே போல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன. பிறகு, ஆஸ்திரேலியா குடிமக்கள், புலம் பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டன.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழக மீனவர்களின் 105 படகுகள் – ஏலம் விடும் பணி துவக்கம்!

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணிகள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆஸ்திரேலியா அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.